கொக்குவில் ஞானபண்டித வித்தியாலய பரிசளிப்பும், நிறுவனர்நாளும்-(படங்கள் இணைப்பு)
யாழ். கொக்குவில் ஞானபண்டித வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவனர் நிறுவனர் நினைவுநாளும் நேற்று (18.10.2015)நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. நடராஜா கந்தவனச்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. அருணாசலம் அரியதாஸ் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. கனகசபை குகதாசன் (பழைய மாணவர்), திருமதி சிவக்கந்தகுமார் செல்வராணி (பழைய மாணவி) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். திருமதி. சிவக்கந்தகுமார் செல்வராணி அவர்கள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸிலிருந்து இந்நிகழ்விற்கு வருகைதந்து கலந்துகொண்டிருந்தார். இவர் இப் பாடசாலைப் பிள்ளைகளுக்காக இப்பாடசாலையின் ஒவ்வொரு வருடாந்த பரிசளிப்பு விழாவின்போதும் அதற்கான பரிசில்களையும், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்திபெறும் பிள்ளைகளுக்கான துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வருகின்றார். இம்முறையும் இவர் துவிச்சக்கரவண்டி மற்றும் பரிசில்களையும் வழங்கினார். இதன்போது பிள்ளைகளின் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.