திருக்குறளை இசையோடு பாடலாக தொகுத்த இறுவெட்டு வெளியீட்டு விழா-(படங்கள் இணைப்பு)
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து வருகைதந்துள்ள திரு. சிறி என்பவர் (பாரிஸ் சிறி) 1330 குறளையும் சுமார் 150 கலைஞர்களின் குரலிலே இசையோடு பாடலாக தொகுத்து அதற்கான பொலிப்புரையும் இணைத்து வெளியிட்டுள்ளார். இவர் பல்வேறு இடங்களிலே இதனை வெளியிட்டு வருகின்றார். நேற்று யாழ்ப்பாணத்தில் இந்த இறுவெட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது. 1330 குறளையும் சுமார் 150 கலைஞர்களின் குரலிலே இசையோடு பாடலாக தொகுக்கப்பட்ட இந்த இறுவெட்டு சுமார் ஒன்பது மணித்தியாலங்களைக் கொண்டுள்ளது. மேற்படி இறுவெட்டு வெளியிட்டு விழாவிலே புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ அனந்தி சசிதரன் மற்றும் பல உள்ளுர்க் கலைஞர்கள், யாழ்ப்பாணத்துக் கலைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.