Header image alt text

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர், சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்-

briberyலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டைடஸ் போதிபால வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆணைக்குழுவின் மற்றும் சில பதவிகளுக்கு நீதியரசர் லால் ரஞ்சித் சில்வா மற்றும் சந்தரநாத் நெவில்லே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி அதன் தலைவராக பேராசிரியர் சிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளதோடு, அன்டன் ஜெயநாதன், எம்.பீ.எச்.மனதுங்க, வை.எல்.எம்.ஷவாகீர் மற்றும் சாவித்திரி விஜேசேகர ஆகியோரும் இதல் அடங்குகின்றனர். இதேநேரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் தலைவராக தர்மசேன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.சலாம், வீ.ஜெகராஜசிங்கம், நிஹால் செனவிரத்ன, டாக்டர் பிரதீப் இராமானுஜம், எம்.எஸ்.செனவிரத்ன, தாரா விஜயதிலக, டீ.எல்.மென்டிஸ், எஸ். ரணுக்கே, சரத் ஜயதிலக ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒஸ்லோ துணை மேயராக இலங்கைத் தமிழ்ப் பெண் தெரிவு-

norway tamil ladyநோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் துணை மேயராக 27 வயது இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோர்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் கம்சாயினி குணரட்ணமும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011ஆம் ஆண்டு நோர்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இவர் உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பிறந்த இவர் தனது 3 ஆவது வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாகச் சென்றிருந்தார். தற்போது 27 வயதில் தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா கல்லாண்டகுளம் சுற்றுலாத்தலம் மேம்பாடு குறித்த கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

20151012_155040வவுனியா கல்லாண்டகுளத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலத்தினை மேம்படுத்துவதற்காக வட மாகாண சபையின் உள்ளூராட்சி அமைப்பினால் ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான வேலைத்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் அண்மையில் கல்லாண்டகுளம் நாதன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், சனசமூக நிலய உத்தியோகத்தர் வஜீபா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ராயப்பு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தனர். Read more

உயர்மட்ட அதிகாரிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை-

sri lanka (4)வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றை வேறு நிறுவனங்களுக்கு மாற்றியனுப்புதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அரச ரகசியங்களை வெளிப்படுத்தல், அரச கொள்கைக்கு புறம்பாக செயற்பட்டமை மற்றும் திறனற்ற வகையில் பணியாற்றியமை உள்ளிட்ட காரணங்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சில அதிகாரிகள்மீது லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்காக தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தொடர்பாகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.

ஆசிரியர் தின நிகழ்வுகள் பிளவத்தை பாடசாலையில் இடம்பெற்றது-(படங்கள் இணைப்பு)

P1090966யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசத்தில் அமைவு பெற்றுள்ள வட்;டு வடக்கு சித்தன்கேணி பிளவத்தை அ.மி.த.க பாடசாலையின் ஆசிரியர் தினம் 06.10.2016 அன்று பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பின் கௌரவ. பா.கஜதீபன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வின் போது வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சி ஐங்கரன் அவர்கள் ஆசிரியர்களின் உயர்வான அர்ப்பணிப்பான செயற்பாட்டினை கௌரவித்து நற்சான்றிதல் வழங்கி கௌரவித்துக் கொண்டார். இவ் நிகழ்வின் போது குறித்த பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து ஆசிரியர்கட்கு வாழ்த்துக்கைளையும் தெரிவித்துக் கொண்டனர்.
Read more

ஐ.நா அதிகாரி மிரொஸ்லாவ் ஜென்கா இலங்கைக்கு விஜயம்-

UN officerநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஐ.நா பொதுச் சபையின் சமீபத்திய அமர்வின்போது, இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஜென்காவின் விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சகல தரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையுமென கூறப்படுகிறது. அத்துடன் அவர் இலங்கையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஐ.நாவின் 70வது வருட நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் விசேட நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

20151012_134339வவுனியா கோமரசங்குளம் மகா வித்தியாலத்தில் 2015ம் ஆண்டிற்கான நீங்கள் எமக்கு அதிசிறந்தவர்கள் எனும் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, எஸ்.தர்மபாலா மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். வட மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து இப் பாடசாலைக்கு உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more

நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் வழக்குத் தாக்கல்-

ravirajபாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 6 சந்தேகநபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் நேற்றையதினம் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், தற்போது கடற்படை தரப்பைச் சேர்ந்த சிலர் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இந்த விவகாரம் தொடர்பில் மரபணு மற்றும் வழக்கு தடயப் பொருட்கள் குறித்து அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதவான் இதன்போது அறிவித்துள்ளார். அத்துடன் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன் வழக்கு தாக்கல் செய்யுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நாராஹேன்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு அடுத்த மாதம் மூன்றாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்மீது இராணுவம் தாக்குதல் நடத்தியமை அறிக்கையில் சுட்டிக்காட்டு-

shell attackஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இலங்கையில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது. தங்களது விசாரணை அறிக்கையை இக்குழு அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, இவ்வறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஐ.நா சபையால் நியமிக்கப்பட்ட மர்ஸ_கு தருஸ்மன் தலைமையிலான குழுவால் தெரிவிக்கப்பட்ட ‘40,000 வரையிலான பொதுமக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்” என்ற வாதத்தை மறுத்துள்ள பரணகம அறிக்கை, யுத்தத்தின் இறுதி மணித்தியாலங்களில் கூட தங்களது நன்மைக்காக, தமிழீழ விடுதலைப் புலிகளே பொதுமக்களை அதிகளவில் கொன்றதாக தெரிவிக்கின்றது. Read more