உயர்மட்ட அதிகாரிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை-
வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றை வேறு நிறுவனங்களுக்கு மாற்றியனுப்புதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அரச ரகசியங்களை வெளிப்படுத்தல், அரச கொள்கைக்கு புறம்பாக செயற்பட்டமை மற்றும் திறனற்ற வகையில் பணியாற்றியமை உள்ளிட்ட காரணங்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சில அதிகாரிகள்மீது லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்காக தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தொடர்பாகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.
ஆசிரியர் தின நிகழ்வுகள் பிளவத்தை பாடசாலையில் இடம்பெற்றது-(படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசத்தில் அமைவு பெற்றுள்ள வட்;டு வடக்கு சித்தன்கேணி பிளவத்தை அ.மி.த.க பாடசாலையின் ஆசிரியர் தினம் 06.10.2016 அன்று பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பின் கௌரவ. பா.கஜதீபன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வின் போது வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சி ஐங்கரன் அவர்கள் ஆசிரியர்களின் உயர்வான அர்ப்பணிப்பான செயற்பாட்டினை கௌரவித்து நற்சான்றிதல் வழங்கி கௌரவித்துக் கொண்டார். இவ் நிகழ்வின் போது குறித்த பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து ஆசிரியர்கட்கு வாழ்த்துக்கைளையும் தெரிவித்துக் கொண்டனர்.