Header image alt text

மூன்று வாரத்தில் மீண்டும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பு-

meetingஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் முன்மொழிவுகள் சம்பந்தமாக அனைத்து கட்சிகளின் பேச்சுவார்த்தையை தெடர்ந்து நடத்திச் செல்ல அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. ஜெனீவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் ஆராயும் பொருட்டு கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாடு நேற்றுமாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன், எதிர்வரும் 03 வாரங்களில் மீண்டும் கூடி இது தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 23 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் உட்பட மேலும் விஷேட பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்திற்கு வட மகாhணசபை உறுப்பினர் க.சிவநேசன்(பவன்); உதவி-(படங்கள் இணைப்பு)

photo 1வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து பெறப்பட்ட பத்து அலமாரிகள் நேற்று (22.10.2015) முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்திற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் பாரதி சிறுவர் இல்லத்தில் நேற்றுமாலை 5மணியளவில் நடைபெற்ற விஜயதசமி நிகழ்வில் பங்கேற்றிருந்தபோது மேற்படி அலமாரிகளை பாரதி சிறுவர் இல்ல நிர்வாகி திருமதி மகேஸ்வரி அவர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற வாணி விழாவிலும் மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசன் பவன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வின்போது சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் சிறுவர் இல்லத்தில் இருக்கும் பிள்ளைகளும், நிர்வாகத்தினரும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர். Read more

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70ஆம் ஆண்டு நிறைவு தினம்-

united nationsஐக்கிய நாடுகள் அமைப்பின் 70ஆவது ஆண்டு நிறைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் ஆகியன நாளையதினம் (24.10.2015) கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் விஷேட நிகழ்வுகள் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1945ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் 1955ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி அதன் உறுப்பு நாடாக இலங்கை இணைந்து கொண்டது. அத்துடன் கடந்த 21ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகார பிரதி செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா நாளையதினம் கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

dsdfdfdfddddமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (20.10.2015 முத்தான வியர்வை என்னும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது. உள்ளுர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தான வியர்வை என்னும் இந்நிகழ்வின்போது உள்ளுர் உற்பத்தியாளர்களிடையிலான போட்டி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஏற்பாட்டாளரான பவானி அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி போட்டி நிகழ்வினில் விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர், வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), பிரதேச செயலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் பெண்கள், இளைஞர்கள், ஊர்ப்பெரியார்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது-

vimalகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைதுசெய்துள்ளதுடன் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்றுகாலை செல்லுபடியற்ற கடவுச்சீட்டில் இத்தாலிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முற்பட்டவேளை விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிந்திய தகவலின்படி விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவரை 10,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கைது-

prasanthanதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று காலை காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில், வீட்டில் வைத்து ஆசிரியரான தமிழ்நாட்டு மனோகரன் எனப்படும் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி தம்பதியான இருவரினதும் கொலை தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்ததன் பிரகாரம், பிரசாந்தன் நேற்று வியாழக்கிழமை இரவு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தோடு தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான பிரசாந்தனின் சகோதரன் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை – இந்திய மீனவர் தொடர்பான பேச்சுவார்த்தை-

fishermen talksஇலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் இப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்காக பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட அபிப்பிராயங்கள் இதன்போது சம்பாஷணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கடற்படை, கரையோரப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் வடபகுதி மீனவர் தரப்புகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புத்தளம் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு, 33பேர் காயம்-

accidentபுத்தளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 33 பேர் வரை காயமடைந்துள்ளனர். புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த வேளையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தளம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

ஐ.நா பிரேரணையை தோற்கடித்தே தீருவோம்-வாசுதேவ-

140204184940_vasudeva_nanayakkara_304x171_lanintegmin_gov_lkஇலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை, தோல்வியடைய செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்றுஇடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் மக்கள் என அனைவரும் இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியதுபோல, ஜெனிவா அறிக்கையைவிட பரணகம அறிக்கை கடுமையானதாக இருந்தால் எமது நாட்டில், சாட்சிகளை விசாரித்து பரணகம அறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சரத் அமுனுகம அமைச்சராக பதவிப் பிரமாணம்- தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்-

amunugamaகலாநிதி சரத் அமுனுகம அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இன்றுமுற்பகல் பதவிப்பரமாணம் செய்து கொண்டுள்ளார். விசேட பணிகள் அமைச்சராக அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை அரிசியலமைப்புச் சபையின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளராக பணியாற்றிய சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரி திலக் கொலுலுரே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பிராங் டி சில்வா ஆகியோரே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மங்கள சமரவீர மிரோஸ்லாஃப் ஜென்கா சந்திப்பு-

UN officerஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம், மிரோஸ்லாஃப் ஜென்கா, இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தொடரின்போது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீமூனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம்

Posterஇலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (23) கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று நாட்டின் பல பாகங்களிலும் ஆர்பாட்டங்ள் முன்னெடுக்கப்படவுள்தாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. Read more