ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70ஆம் ஆண்டு நிறைவு தினம்-

united nationsஐக்கிய நாடுகள் அமைப்பின் 70ஆவது ஆண்டு நிறைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் ஆகியன நாளையதினம் (24.10.2015) கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் விஷேட நிகழ்வுகள் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1945ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் 1955ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி அதன் உறுப்பு நாடாக இலங்கை இணைந்து கொண்டது. அத்துடன் கடந்த 21ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகார பிரதி செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா நாளையதினம் கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

dsdfdfdfddddமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (20.10.2015 முத்தான வியர்வை என்னும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது. உள்ளுர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தான வியர்வை என்னும் இந்நிகழ்வின்போது உள்ளுர் உற்பத்தியாளர்களிடையிலான போட்டி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஏற்பாட்டாளரான பவானி அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி போட்டி நிகழ்வினில் விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர், வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), பிரதேச செயலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் பெண்கள், இளைஞர்கள், ஊர்ப்பெரியார்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். photo 3 (1) photo 3