வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம்

Posterஇலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (23) கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று நாட்டின் பல பாகங்களிலும் ஆர்பாட்டங்ள் முன்னெடுக்கப்படவுள்தாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளினால் இனச் சுத்தீகரிப்பின் பேரில் சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் ஆகின்றன.
கால் நூற்றாண்டு காலமாக சொல்லெனா துயரங்களுடன் அம்மக்கள் இன்றும் புத்தளம், குருநாகல், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அகதிகள் எனும் அவல வாழ்வை அனுபவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது