மூன்று வாரத்தில் மீண்டும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பு-

meetingஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் முன்மொழிவுகள் சம்பந்தமாக அனைத்து கட்சிகளின் பேச்சுவார்த்தையை தெடர்ந்து நடத்திச் செல்ல அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. ஜெனீவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் ஆராயும் பொருட்டு கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாடு நேற்றுமாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன், எதிர்வரும் 03 வாரங்களில் மீண்டும் கூடி இது தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 23 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் உட்பட மேலும் விஷேட பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்திற்கு வட மகாhணசபை உறுப்பினர் க.சிவநேசன்(பவன்); உதவி-(படங்கள் இணைப்பு)

photo 1வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து பெறப்பட்ட பத்து அலமாரிகள் நேற்று (22.10.2015) முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்திற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் பாரதி சிறுவர் இல்லத்தில் நேற்றுமாலை 5மணியளவில் நடைபெற்ற விஜயதசமி நிகழ்வில் பங்கேற்றிருந்தபோது மேற்படி அலமாரிகளை பாரதி சிறுவர் இல்ல நிர்வாகி திருமதி மகேஸ்வரி அவர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற வாணி விழாவிலும் மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசன் பவன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வின்போது சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் சிறுவர் இல்லத்தில் இருக்கும் பிள்ளைகளும், நிர்வாகத்தினரும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர். photo 1 photo 2 (1)photo 1 (1)
photo 3 (1)

photo 4
photo 5