Header image alt text

ஐநாவின்  அரசியல் விவகாரங்களுக்கான  குழுவினருடன் தேசிய கலந்துரையாடல்களுக்கான  அமைச்சர் மனோ கணேசன சந்திப்பு

manoஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை தலைமைச் செயலாளர் மிரஸ்லாவ் ஜென்கா தலைமையிலான குழுவினருடன் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் நடத்திய சந்திப்பின்போது, இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக நாடெங்கிலும் கலந்துரையாடல் மையங்களை உருவாக்கவுள்ளதாவும் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் அமையவுள்ள இந்த கலந்துரையாடல் மையங்களில் சமூக மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியிருக்கிறார். Read more

கதிர்காமரைக் கொலை செய்ய அரசாங்கம் புலிகளுக்கு பணம் வழங்கியதா?

Kadirgamarமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு அப்போதைய அரசாங்கத் தரப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதா? என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு பணம் வழங்கியமைக்கும் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைக்கும் இடையில் தொடர்புகள் இல்லை என எவராலும் மறுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார், நான்கு மாதங்களின் பின்னர் வடக்கு மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் புலிகளுக்கு பணம் வழங்கியிருந்தது.
கதிர்காமர் கொலைக்கும் பணம் வழங்கப்பட்டமைக்கும் இடையில் தொடர்பு இருக்கக் கூடிய வலுவான சாத்தியங்கள் காணப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடி தாங்க முடியாமல் குற்றத்தை ஏற்றுக்கொண்டேன் கொண்டயா என்பது ஊடகங்கள் வைத்த பெயர்

Kondayaசேயா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த நேற்று பிற்பகல் கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார். இந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சேயா சிறுமியை தான் கொலை செய்ததாக கொடுத்த வாக்குமூலம் பொலிஸார் என்மீது தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்களை தாங்கிக் கொள்ள முடியாததன் காரணமாக அவர்கள் எழுதிக் கொடுத்த தாள் ஒன்றில் கையெழுத்திட்டதாக கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த மேலும் தெரிவித்தார்.
என்னை எவருமே கொண்டயா என்று அழைத்ததில்லை என்றும் நண்பர்கள் கூட துனேஷ் என்றே அழைப்பார்கள். கொண்டயா என்பது ஊடகங்களால் எனக்கு வைக்கப்பட்ட பெயர் என்று இதன்போது அவர் தெரிவித்தார்.
நண்பர் ஒருவரின் வயலில் வேலை செய்துவிட்டு மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே என்னைக் கைது செய்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவரது சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன கூறுகiயில், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அல்லது வேறு மோசமான சம்பவங்கள் சம்பந்தமான எந்த வழக்குகளும் இவருக்கு எதிராக இல்லை என்று தெரிவித்தார்.

கிழக்கில் ஒரே நாளில் இருவேறு ஆலயங்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்; 
 
batticaloa_templeஇனந்தெரியாத நபர்கள் சிலர் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நவக்கிரக விக்கரங்களை உடைத்ததுடன், சில விக்கரகங்கள் வீதிகளிலும், ஆலய கிணற்றிலும் போட்டு விட்டு சென்றுள்ளனர்.
ஆலயத்தின் நவக்கிரகத்திலுள்ள விக்கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தி, பலிபிடம் அடங்களாக 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
வழக்கம் போல அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலய பரிபாலன சபைச் செயலாளர் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடைப்பதை கண்டுள்ளார். உடனடியாக நிருவாக சபையினர் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தெரியப்படுத்தி,  பொலிஸாருக்கு தெரிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி கிராமத்தில் உள்ள இத்தியடி விநாயகர் ஆலயத்தில் பிரதேச மக்களால் வழிபட்டு வந்த விநாயகர் உருவக் கல் விஷமிகளினால் நேற்று வெள்ளிக் கிழமை இரவு திருடப்பட்டு பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கம் போல் குறித்த ஆலயத்திற்கு இன்று காலை வழிபடச் சென்ற பொதுமக்கள் சிலர் ஆலயத்தில் விநாயகர் உருவக் கல் இல்லாததையும் சுவாமி உருவப்படங்கள் தூக்கி வீசப்பட்டிருப்பதையும் ஆலய நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தற்போது மேற்படி ஆலயத்தில் சுவாமியின் உருவக் கல்லானது வைக்கப்பட்டுள்ளதால் பிராயச் சித்த பூஜை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேற்படி உருவக் கல்லானது கடந்த வருடமும் இதே போன்று பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும் பின்னர் பொதுமக்கள் கண்டுபிடித்து அதே இடத்தில் பிராயச் சித்த பூஜை செய்யததாகவும் தெரிவித்தனர்.
எனவே மேற்படி விடயம் அடிக்கடி இடம் பெறுவதனால் பொலிசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.