ஆனந்தசங்கரியுடன் இணைகிறார்? கருணா
கருணா அம்மான எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவிவகித்த விநாயகமூர்த்தி முரளிதரன், ஆனந்தசங்கிரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து இனிவரும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் தனக்கு அறியத்தரவில்லை என்று வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்களுக்கு இலக்கான இலங்கை இராணு வீரர்கள் இராணுத் தளபதியுடன் சந்திப்பு
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை இராணுவப் படையின் வீரர்கள் சிலர் இன்று பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை சந்திக்க உள்ளனர்.
இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற இருக்கின்றது.
2010ம் ஆண்டு கட்டாயப்படுத்தல் காரணமாக ஓய்வுப் பெற்ற முப்படைகளி்ன வீரர்கள் 40 பேர் கடந்த தினங்களில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவின் பரிந்துரைக்கமைய அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
அந்த 40 பேரில் இராணுவப் படையை சேர்ந்த 15 வீரர்கள் இருப்பதுடன் அவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தில் உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாடு துரித வளர்ச்சியடையும்
எமது நாட்டின் இனத்தின் ஒற்றுமை மற்றும் அதன் சமத்துவ தன்மைக்காக மூவின மக்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.
அப்போது நாடு துரித வளர்ச்சியினை பெற்றுக்கொள்ளும் என புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின் எற்பாட்டில் புதிய இலங்கையினை (Unity Mission trust) உருவாக்கும் நோக்குடன் புதிய உலகம், புதிய இலங்கை, புதிய வழிகள் போன்ற எண்ணக்கருவில் அமைந்த எட்டாவது இளைஞயர் மாநாடு நேற்று யாழ் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.இம்மாநாட்டுக்கு பிரதம அதிதியாக புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்
இந்த நிகழ்வில் இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.