ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உட்பட தெற்காசிய நாடுகளில் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 150 ஆக அதிகரிப்பு. பல சிறுவர்களும் பலி
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்ம் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உட்பட தெற்காசிய நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் நேரப்படி இன்று மதியம் 2.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், 30 முதல் 40 செக்கன்கள் வரை நீடித்திருந்தாகவும். ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தானில் 94 பேர் பலியானதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நில நடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
அதேவேளை ஆப்கானிஸ்தானில் பலி எண்ணிக்கை 17 என்றும் மேலும் 55 பேர் காயமடைந்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் பூகம்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியின் போது ஆப்கான் நகரமான தலுக்கானில் 12 பள்ளிச்சிறுமிகள் பலியாகியுள்ளனர். மேலும் 30 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்தியாவின் டெல்லி, காஷ்மீர், ஹரியானா மற்றும் தமிழ்நாட்டிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு தனியார் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
மரபணு அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 09ம் திகதி வரை ஒத்திவைப்பதாக யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம் கராத்தே ஆசிரியர் கொலை; 08 பேர் கைது – 15 பேரை தேடுகிறது பொலிஸ்
அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றின் உரிமையாளரான பிரபல கராத்தே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சந்தேகத்தின் பேரில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் மேலும் 15 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று காலை இவர்கள் 08 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நீண்ட காலமாக காணப்பட்டு வந்த பகையே கொலைக்கான காரணம் என தெரிவித்த பொலிஸார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
20 பேரைக் கொண்ட ஒரு கும்பல் நேற்று முன்தினம் இரவு அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றின் உரிமையாளரான பிரபல கராத்தே ஆசிரியரை கொலை செய்திருந்தது. அத்துடன் அந்த இரவு விடுதியில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவரும் சம்பவத்தில் காயமடைந்திருந்தனர்.
தேடப்பட்ட குற்றாவாளி’ சோட்டா ராஜன் பாலியில் கைது
இந்தியக் குற்றக்குழுவொன்றின் தலைவரான சோட்டா ராஜனை இந்தோனேஷியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐஅயபந உழிலசiபாவ ளுஉநைnஉந Phழவழ டுiடிசயசல ஐஅயபந உயிவழைn கைது செய்யப்பட்டுள்ள சோட்டா ராஜன் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
ராஜேந்திர சதாஷிவ் நிகல்ஜெ என அறியப்படும் சோட்டா ராஜன் அல்லது குட்டி ராஜன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தார்.
பல கொலைகளுக்கு அவர் காரணம் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவரது தலைமையிலான குற்றக்குழு மும்பை நகரில் கள்ளக்கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று சிட்னி நகரிலிருந்து பாலி விமான நிலையத்துக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வேறொரு பெயரில் வாழ்ந்து வந்த அவரது பயணம் குறித்து, அந்நாட்டு காவல்துறையினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே பாலி விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா
கடந்த புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட லயனல் பெர்ணான்டோ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார
தனி விமானத்தில் பாரியளவில் போதைமருந்து கடத்திய சவூதி இளவரசர் கைது
சவூதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உட்பட மேலும் நான்கு பேர் லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக போதை மருந்து கடத்த முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியான விமானம் ஒன்றில் இரண்டு டொன் போதை மருந்தை இவர்கள் கடத்த முற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குடியேறிகளின் பிரச்சினையை சமாளிக்க புதிய திட்டம்
ஐரோப்பா நோக்கி வரும் குடியேறிகள் பல நெருக்கடிகளை சந்திக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வந்தடைய முயற்சிக்கும் மேலும் ஒரு லட்சம் குடியேறிகளுக்கான தற்காலிக குடியிருப்புகளை அமைப்பதற்கு, மத்திய ஐரோப்பிய மற்றும், பால்கன் நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
பிரசல்ஸில் இடம்பெற்ற அவசர மாநாட்டில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஸ்லோவேனியா, மற்றும் கிரேக்கம் ஆகியவை தமது எல்லைகளை பாதுகாத்துகாத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு உதவ நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இதேவேளை ஐரோப்பிய மற்றும் பால்கன் நாடுகள் தமக்குள்ளான ஓத்துழைப்பை மேம்படுத்துவதுவதற்கும் உறுதிபூண்டுள்ளன.