Header image alt text

உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழு இன்று முதல் சந்திப்பு

meetingஉள்ளூராட்சி பிரிவுகளின் எல்லை வரையறை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று முதன்முறையாக கூடவுள்ளது.
உள்ளூராட்சி சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இன்று பிற்பகல் 02.00 மணியளவில் இந்த குழு கூடவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பைசர் முஸ்தபாவால் அமைச்சின் முன்னாள் செயலாளர் அசோக பீரிஸ் தலைமையில் அனைத்து கட்சிகளில் பிரதிநிதிகள் அடங்களாக ஐவர் அடங்கிய குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எம். மிஸ்வார், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் சட்டத்தரணி சாலிய மெத்திவ், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
தற்போது வர்த்தமானியில் உள்ள உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பிலுள்ள சிக்கல்கள் மற்றும் அதில் திருத்தம் செய்தல் குறித்து மூன்று மாதங்களுக்குள் குறித்த குழு, உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

youthஎதிர்வரும் 7.11.2015 அன்று நடைபெறவுள்ள, இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுப் பத்திரங்களை வேட்பாளாகள் இன்று புதன்கிழமை காலை தொடக்கம் நண்பகள் வரை தாக்கல் செய்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் வேட்புமனுப் பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று இடம் பெற்றதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தெரிவித்தார்.
இந்த வேட்புமனுப்பத்திரங்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை புதன்கிழமை நண்பகள் 12 மணியுடன் நிறைவு பெற்றுள்ளன.
எதிர் வரும் நவம்பர் மாதம் 7ம் திகதி இதற்கான தேர்தல் நாடுபூராகவும் நடைபெறவுள்ளன.
225 பேரைக் கொண்ட இந்த இளைஞர் பாராளுமன்றத்தில் நாடுபூராவும் உள்ள 160 தொகுதிகளில் இருந்தும் 160 பேரும், ஏனையோர் போனஸ் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வடக்கில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள்; அமெரிக்க குழுவிடம் முதலமைச்சர் தெரிவிப்பு

cm&usஇலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின் ரஸ்ஸல் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குழுவினர் யாழிற்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார்.
இதன்போது அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது, Read more

கேபியை கைது செய்யாதது குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் விளக்கம்

KPவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் தொடர்பான அறிக்கையொன்றை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டபோது சட்ட மா அதிபர் இதனை தெரிவித்த போதிலும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தான விபரங்களை நீதிமன்றத்தில் அவர் குறிப்பிடவில்லை. Read more