Header image alt text

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு ஓராண்டு நிறைவு-

meeriyabeddaபதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது. இந்த ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது மீரியபெத்தை மண்சரிவில் இறந்த உறவுகளுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தி சமய கிரியைகளில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்த மக்களை நினைவு கூறி இன்றுகாலை 7மணியளவில் லிந்துலை சென்றெகுலரஸ் தோட்டத்தில் நினைவஞ்சலி கூட்டமொன்றும் இடம்பெற்றது. அத்துடன் தோட்ட ஆலயத்தில் விஷேட ஆத்மசாந்தி பூசையும் நடைபெற்றது. இறந்தவர்களின் நினைவாக 37 மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு பின்னர் சமய பிராத்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. பூஜையின் பின்னர் மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு பாதிக்கபட்ட மக்களுக்கு மலையக அரசியல்வாதிகள் அரசாங்கம் உடனடியாக வீடுகளை அமைத்து மீள்குடியேற்றத்தினை செய்யுமாறு கோரி பேரணியை நடத்தினர் இதன்போது ஆண்கள் பெண்கள் என 300 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் அத்தோடு மலையக பிரதேசத்தில் பல தோட்டங்களில் இன்னும் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான இடங்களை அதிகாரிகள் இனங்கண்டு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துத் தருவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு பிரார்த்தனையில் கலந்துகொண்ட மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்

நேபாள முதல் பெண் அதிபராக பித்யாதேவி பண்டாரி தெரிவு-

nepal presidentநேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட, பித்யாதேவி பண்டாரி அந்நாட்டின் முதல் பெண் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. பாராளுமன்றம் அமைக்கப்பட்ட ஒரு மாதத்தில் அதிபருக்கான தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதால் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பித்யாதேவி பண்டாரியும், நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் குல்பகதூர் குருங் என்பவரும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இதில் பித்யாதேவி பண்டாரி 327 வாக்குகள் பெற்று அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குல்பகதூர் குருங் 214 வாக்குகளைப் பெற்றார். இதனையடுத்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஒன்சாரி கர்டி, நேபாளத்தின் புதிய அதிபராக பித்யாதேவி பண்டாரியைத் தெரிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பித்யாதேவி பண்டாரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகை உபேக்ஷா சொர்ணமாலியிடம் விசாரணை-

upekshaபாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, இன்றுகாலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா செர்ணமாலி சென்றுள்ளார். இவர் ஒரு பிரபல நடிகையாவார். இலங்கை கேடரிங் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான வாக்குமுலத்தை பதிவு செய்யவே அவர் அழைக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடகர் பந்துல விஜேவீரவும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவுக்கு நாளை சமூகமளிக்க முடியாதிருப்பதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் அடுத்த மாதம் 20 ஆம் திகதியின் பின்னரே இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தனது சட்டத்தரணி ஊடாக நிசாந்த விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய விசேட குழு இலங்கை வருகிறது-

europ1ஐரோப்பா சங்கத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி ஏற்றுமதிக்கான தடை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் திகதி இந்த குழு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் கிரேஸ் ஆசிர்வாதன், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை வரும் அந்த குழுவினர் 5 நாட்;கள் நாட்டில் தங்கியிருந்து, மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கத்தின் பொருட்டு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளனர். பின்னர் அவர்கள் ஐரோப்பிய சங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள், பிக்குகள் உள்ளிட்ட 39 மாணவர்கள் கைது-

dfdfபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் 39 மாணவர்கள் கொழும்பு 04, பம்பலப்பிட்டி பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் இரண்டு பிக்கு மாணவர்களும் மாணவிகள் ஐவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வட்டு கிழக்கு சித்தன்கேணியில் பா.உ சித்தார்த்தன் மக்கள் சந்திப்பு-(படங்கள் இணைப்பு)

P1090438யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வட்டு கிழக்கு சித்தன்கேணியில் அமைந்துள்ள வட்டு கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் அழைப்பின்பேரில் அண்மையில் அப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்பகுதி மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அதேவேளை மக்களது அத்தியாவசிய தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று தெரிவித்துள்ளார்.

Read more

தமிழ் தேசிய பணிக்குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி-

vinaதமிழ் தேசிய பணிக்குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி, துணைத் தலைவர்களில் சிரேஸ்ட்ட சட்டத்தரணி சி,வி.விவேகானந்தன், ந.ச.ச.க கட்சியின் வி.திருநாவுக்கரசு, சட்டத்தரணிகள், ரத்னவேல், காண்டீபன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டு மீளமைக்கப்பட்டுள்ளதாக, துணைத்தலைவர் மு.தம்பிராசா ஊடக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் டாக்டர் நல்லையா குமரகுருபரன் தொடர்ந்தும் பணியாற்றுவார் என்றும், இன்னும் பல முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பணிக்குழு பற்றி அடுத்துவரும் செய்திக்குறிப்பில் வெளியாகும் எனவும் துணைத்தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

a2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 40 மாணவர்களுக்க கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு துணுக்காய் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது. யுத்த அனர்தங்களினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் வாடுகின்ற குடும்பங்களின் நிலையினை கருத்தில் கொண்டு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையினை சிறந்த முறையில் முன்னெடுக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு முப்பதாயிரம் ரூபா பெறுமதியான புத்தக பைகளும் மழைக்கவசமும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. ஏற்க்கனவே துணுக்காய் பிரதேச செயளகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 21 மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்பு நிதி மாதம்தோறும் 1000 ரூபா வீதம் வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிட தக்கது. Read more

தமிழ் தலைவர்களே பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிட முன்வாருங்கள் வட்டு இந்து வாலிபர் சங்க மரநாட்டு விழாவில் வேண்டுகோள்-(படங்கள் இணைப்பு)

20யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு உதவிட வடமாகாண சபையும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்ற அழைப்பினை வட்டு இந்து வாலிபர் சங்கம்இந்து வாலிபர் சங்க மரநாட்டு விழாவின்போது விடுத்துள்ளது.

மக்கள் வங்கியின் அனுசரனையில் சங்கானை பிரதேச செயளகத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் நடைபெற்ற மரநடுகை விழாவிற்கு தலைமை தாங்கிய வட்டு இந்து வாலிப சங்க முன்னாள் தலைவரும் அராலி சரஸ்வதி மாகாவித்தியாலய அதிபரும்மாகிய திரு. ந.சபாரட்ணசிங்கி அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.ஏ சுமத்திரன் கௌரவ சரவணபவன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான திரு.ஆனோல்ட் திரு.சயந்தன் திரு.சுகிர்தன் திரு.அஸ்வின் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை முன்னாள்; தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் முன்னிலையில் இந்த அழைப்பை விடுத்தார். Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் பணிகள் பாராட்டத்தக்கது-இனிய வாழ்வு இல்ல பணிப்பாளர்-(படங்கள் இணைப்பு)

i8வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ஆற்றப்படுகின்ற பணிகள் பாராட்டத்தக்கது என இனிய வாழ்வு இல்ல பணிப்பாளர் தெரிவித்தார். மேற்ப்படி இல்ல மாணவர்களக்கான நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான ஒலிவாங்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு வட்டு இந்து வாலிபர் சங்க தலைவர் தலைமையில் இனிய வாழ்வு இல்லத்தில் நடைபெற்றது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் கடநத 4 வருடங்களாளக எமது இல்ல பிள்ளைகளின் வளர்ச்சியிலும் அவர்களின் தேவைகளையும் உடனே இனம் கண்டு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தெரிவிக்கையில்; வன்னி பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய சிறுவர் இல்லங்களுக்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருவதை நான் நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் அறிந்து கொண்ட வகையில் அவர்களது சழூக கல்வி பணிகளை பெற்ற ஒவ்வோருவரும் இன்று பல் வேறு துறைகளில் சிறந்த சாதனையாளர்களாக திகழ்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்ப சுமைகளோடு வாடுகின்ற எங்கள் பிள்ளைகளின் மனங்களை ஆற்றுப்படுத்துகின்ற சேவை புரிகின்ற வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் பணிகளை நான் மனதார பாராட்டுவதோடு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என்று தெரிவித்துக் கொண்டார்.
Read more

எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்னாள் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவிப்பு-(படங்கள் இணைப்பு)

P1090950இலங்கைப் பராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய கௌரவ. இரா.சம்பந்தன் அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது உதயன் விருந்தினர் விடுதியில் சந்தித்துக் கலந்துரையடிய வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி அவரைக் கௌரவித்தார்.

இவ் நிகழ்வின் பாது நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்களும் எதிர்க்கட்சித் தலைவருக்கு பொன்னாடை போhத்தி கௌரவித்துள்ளார். Read more