தமிழ் தலைவர்களே பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிட முன்வாருங்கள் வட்டு இந்து வாலிபர் சங்க மரநாட்டு விழாவில் வேண்டுகோள்-(படங்கள் இணைப்பு)
யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு உதவிட வடமாகாண சபையும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்ற அழைப்பினை வட்டு இந்து வாலிபர் சங்கம்இந்து வாலிபர் சங்க மரநாட்டு விழாவின்போது விடுத்துள்ளது.
மக்கள் வங்கியின் அனுசரனையில் சங்கானை பிரதேச செயளகத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் நடைபெற்ற மரநடுகை விழாவிற்கு தலைமை தாங்கிய வட்டு இந்து வாலிப சங்க முன்னாள் தலைவரும் அராலி சரஸ்வதி மாகாவித்தியாலய அதிபரும்மாகிய திரு. ந.சபாரட்ணசிங்கி அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.ஏ சுமத்திரன் கௌரவ சரவணபவன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான திரு.ஆனோல்ட் திரு.சயந்தன் திரு.சுகிர்தன் திரு.அஸ்வின் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை முன்னாள்; தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் முன்னிலையில் இந்த அழைப்பை விடுத்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ஒரு காலத்தில் இலட்சிய நோக்கோடு கௌரவமாக வாழ்ந்த எங்கள் உறவுகள் இன்று பல்வேறு துன்ப சுமைகளோடு தமது எதிர்கால வாழ்வை கொண்டு நடத்துவதற்க்கான எந்த விதமான உதவிகளும்மற்று ஏராளமானவர்கள் வன்னி பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதை நாம் காணக்கூடியாதக உள்ளது.
அவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டும் அங்கவினமானவர்களின் சுயதொழில் முயற்ச்சிக்காகவும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்மென வட்டு இந்து வாலிபர் சங்கம் வட்டுக்கோட்டை வாழ் மக்கள் புலம்பெயர் உறவுகள் மற்றும் நன்பர்களின் உதவியோடு எம்மாலான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்
இன்னிலையில் தமிழ் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் ஒன்றினைந்து வடமாகாணசபை ஊடாக காலத்தின் கட்டாயமாக இருக்கின்ற பாதிக்கபட்ட மக்களின் எதிர்காலத்திற்க்காக ஒன்றினைந்து பனியாற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.
தொடர்ந்து தெரிவிக்கையில் அரசியல் பிரமுகர்கள் பாதிக்கபட்ட பிரதேசங்களுக்கு சென்று அங்கு வாழ்கின்ற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்க்கான செயல்த்திட்டங்களையும் தமக்கு உள்ள உச்ச வழங்களை பயன்படுத்தி மக்களின் வாழ்வில் ஒளியேற்றிட கட்சிபேதங்களை மறந்து கடமையாற்ற வேண்டியது தமிழ் தலைவர்கள் என கூறிக்கொள்கின்ற ஒவ்வோருவரினதும் பாரிய கடமையென தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் 100 மேற்பட்ட மரக்கன்றுகள் சங்க காரியாலய வழாகத்தில் நாட்டி வைக்கப்பட்டது