வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 40 மாணவர்களுக்க கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு துணுக்காய் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது. யுத்த அனர்தங்களினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் வாடுகின்ற குடும்பங்களின் நிலையினை கருத்தில் கொண்டு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையினை சிறந்த முறையில் முன்னெடுக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு முப்பதாயிரம் ரூபா பெறுமதியான புத்தக பைகளும் மழைக்கவசமும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. ஏற்க்கனவே துணுக்காய் பிரதேச செயளகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 21 மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்பு நிதி மாதம்தோறும் 1000 ரூபா வீதம் வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிட தக்கது. இம் நிகழ்வில் கருத்து தெரிவித்த வட்டு இந்து வாலிபர் சங்க தலைவர் கு.பகீரதன் அவர்கள் யுத்த அனர்தங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னேடுத்து வருவதாகவும் துணுக்காய் பிரதேச செயளகம் வட்டு இந்து வாலிபர் சங்கத்தோடு இனைந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். இன் நிகழ்வில் பிரதேச செயளக உதத்தியோகத்தர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் வட்டு இந்து வாலிபர் சங்க அங்கத்hவர்கள் கலந்து கொண்டனர்.