கராத்தே சம்பியன் கொலை தொடர்பில் சந்தேகநபரின் சகோதரன் கைது-

444 (2)அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் கராத்தே சம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை, தொடர்பில் பிரதான சந்தேகநபரின் சகோதரரை தங்காலையில் வைத்துக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்;. சிலருக்கு காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்தமை என்பன தொடர்பில் இதுவரையிலும் 22பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐகதான இருவரை தவிர, ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் இராணுவ வீரரான அநுராதபுரம் அஹயியாகமவைச் சேர்ந்த ஆர்.ஏ.இனோன் ரணசிங்க என்பவரை வெளிநாட்டுக்கு செல்வதற்கு இடமளிக்கவேண்டாம் என்றும் அவரது கடவுச்சீட்டை முடக்குமாறும் அநுராதபுரம் பிரதான நீதவான் ஷாந்த கலன்சூரிய, குடிவரவு மற்றும் குடியகல்வு நிர்வாகிக்கு வியாழக்கிழமை தடையுத்தரவு பிறப்பித்தார். பிரபல்யமான இந்த இரவு விடுதிக்குள் 24ஆம் திகதி இரவு 11.45க்கு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களால் அதன் உரிமையாளரான கராத்தே சம்பியன் வசந்த சொய்சா பலியானார். சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 22பேர் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

வட்டு மத்திய கல்லூரி மாணவி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் கௌரவிப்பு-

4வட்டு மத்திய கல்லூரி மாணவியும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க வீராங்கனையுமான செல்வி. மகேந்திரன் கமலினி தேசிய மட்ட போட்டியில் வெற்றி பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டார். மேற்படி வீராங்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 26.10.2015 அன்று வட்டு இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் சங்க முன்னால் தலைவரும் அராலி சரஸ்வதி மாகா வித்தியாலய அதிபருமாகிய திரு. நா.சபாரட்ணசிங்கி தவைமையில் நடைபெற்றது. அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் கோலூன்றி பாய்தலில் கலந்து கொண்டு 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டதோடு வட்டு மத்திய கல்லூரி வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மட்ட போட்டியில் வெற்றி பெற்றமைக்காகவும் அவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ் வீராங்கனைக்கு பொன்னாடையினை வலிமேற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் திருமதி. ஜங்கரன் நாகரஞ்சினியும் நாடாளமன்ற உறுப்பினர்களான கௌரவ சுமத்திரன் கௌரவ சரவணபவன் ஆகியோர் வெற்றிக்கிண்ணம் வழங்கி கௌரவித்தனர். மேற்படி மாணவி கௌரவிப்பு நிகழ்வில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மாகாணசபை உறுப்பினர்களான திரு.ஆனோல்ட் திரு.சயந்தன் திரு.சுகிர்தன் திரு.அஸ்வின் ஆகியோரும் வலிமேற்கு பிரதேச சபை முன்னால் தலைவரும் பங்கேற்றிருந்தனர். 42 3