கொக்குத்தொடுவாயில் 100 பேருக்கு விதைபொருட்கள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள தானிய களஞ்சிய நிலையத்தில் நேற்றுக்காலை 10மணியளவில் 100பேருக்கு உள்ளீடுகைக்கான விதைபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வட மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களின் அமைச்சின் ஊடாக இவை வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களது தலைமையில் நடைபெறவிருந்தநிலையில் அவர் இங்கு சமூகமளிக்க முடியாமற்போனமை காரணமாக வட மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. கந்தையா சிவநேசன்(பவன்) திரு. ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உளுந்து பயறு மற்றும் நிலக்கடலை என்பவற்றுக்கான விதைபொருட்கள் 100 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டன.