Header image alt text

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

a2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 40 மாணவர்களுக்க கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு துணுக்காய் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது. யுத்த அனர்தங்களினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் வாடுகின்ற குடும்பங்களின் நிலையினை கருத்தில் கொண்டு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையினை சிறந்த முறையில் முன்னெடுக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு முப்பதாயிரம் ரூபா பெறுமதியான புத்தக பைகளும் மழைக்கவசமும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. ஏற்க்கனவே துணுக்காய் பிரதேச செயளகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 21 மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்பு நிதி மாதம்தோறும் 1000 ரூபா வீதம் வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிட தக்கது. Read more

தமிழ் தலைவர்களே பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிட முன்வாருங்கள் வட்டு இந்து வாலிபர் சங்க மரநாட்டு விழாவில் வேண்டுகோள்-(படங்கள் இணைப்பு)

20யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு உதவிட வடமாகாண சபையும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்ற அழைப்பினை வட்டு இந்து வாலிபர் சங்கம்இந்து வாலிபர் சங்க மரநாட்டு விழாவின்போது விடுத்துள்ளது.

மக்கள் வங்கியின் அனுசரனையில் சங்கானை பிரதேச செயளகத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் நடைபெற்ற மரநடுகை விழாவிற்கு தலைமை தாங்கிய வட்டு இந்து வாலிப சங்க முன்னாள் தலைவரும் அராலி சரஸ்வதி மாகாவித்தியாலய அதிபரும்மாகிய திரு. ந.சபாரட்ணசிங்கி அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.ஏ சுமத்திரன் கௌரவ சரவணபவன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான திரு.ஆனோல்ட் திரு.சயந்தன் திரு.சுகிர்தன் திரு.அஸ்வின் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை முன்னாள்; தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் முன்னிலையில் இந்த அழைப்பை விடுத்தார். Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் பணிகள் பாராட்டத்தக்கது-இனிய வாழ்வு இல்ல பணிப்பாளர்-(படங்கள் இணைப்பு)

i8வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ஆற்றப்படுகின்ற பணிகள் பாராட்டத்தக்கது என இனிய வாழ்வு இல்ல பணிப்பாளர் தெரிவித்தார். மேற்ப்படி இல்ல மாணவர்களக்கான நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான ஒலிவாங்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு வட்டு இந்து வாலிபர் சங்க தலைவர் தலைமையில் இனிய வாழ்வு இல்லத்தில் நடைபெற்றது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் கடநத 4 வருடங்களாளக எமது இல்ல பிள்ளைகளின் வளர்ச்சியிலும் அவர்களின் தேவைகளையும் உடனே இனம் கண்டு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தெரிவிக்கையில்; வன்னி பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய சிறுவர் இல்லங்களுக்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருவதை நான் நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் அறிந்து கொண்ட வகையில் அவர்களது சழூக கல்வி பணிகளை பெற்ற ஒவ்வோருவரும் இன்று பல் வேறு துறைகளில் சிறந்த சாதனையாளர்களாக திகழ்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்ப சுமைகளோடு வாடுகின்ற எங்கள் பிள்ளைகளின் மனங்களை ஆற்றுப்படுத்துகின்ற சேவை புரிகின்ற வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் பணிகளை நான் மனதார பாராட்டுவதோடு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என்று தெரிவித்துக் கொண்டார்.
Read more

எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்னாள் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவிப்பு-(படங்கள் இணைப்பு)

P1090950இலங்கைப் பராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய கௌரவ. இரா.சம்பந்தன் அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது உதயன் விருந்தினர் விடுதியில் சந்தித்துக் கலந்துரையடிய வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி அவரைக் கௌரவித்தார்.

இவ் நிகழ்வின் பாது நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்களும் எதிர்க்கட்சித் தலைவருக்கு பொன்னாடை போhத்தி கௌரவித்துள்ளார். Read more

உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழு இன்று முதல் சந்திப்பு

meetingஉள்ளூராட்சி பிரிவுகளின் எல்லை வரையறை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று முதன்முறையாக கூடவுள்ளது.
உள்ளூராட்சி சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இன்று பிற்பகல் 02.00 மணியளவில் இந்த குழு கூடவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பைசர் முஸ்தபாவால் அமைச்சின் முன்னாள் செயலாளர் அசோக பீரிஸ் தலைமையில் அனைத்து கட்சிகளில் பிரதிநிதிகள் அடங்களாக ஐவர் அடங்கிய குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எம். மிஸ்வார், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் சட்டத்தரணி சாலிய மெத்திவ், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
தற்போது வர்த்தமானியில் உள்ள உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பிலுள்ள சிக்கல்கள் மற்றும் அதில் திருத்தம் செய்தல் குறித்து மூன்று மாதங்களுக்குள் குறித்த குழு, உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

youthஎதிர்வரும் 7.11.2015 அன்று நடைபெறவுள்ள, இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுப் பத்திரங்களை வேட்பாளாகள் இன்று புதன்கிழமை காலை தொடக்கம் நண்பகள் வரை தாக்கல் செய்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் வேட்புமனுப் பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று இடம் பெற்றதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தெரிவித்தார்.
இந்த வேட்புமனுப்பத்திரங்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை புதன்கிழமை நண்பகள் 12 மணியுடன் நிறைவு பெற்றுள்ளன.
எதிர் வரும் நவம்பர் மாதம் 7ம் திகதி இதற்கான தேர்தல் நாடுபூராகவும் நடைபெறவுள்ளன.
225 பேரைக் கொண்ட இந்த இளைஞர் பாராளுமன்றத்தில் நாடுபூராவும் உள்ள 160 தொகுதிகளில் இருந்தும் 160 பேரும், ஏனையோர் போனஸ் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வடக்கில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள்; அமெரிக்க குழுவிடம் முதலமைச்சர் தெரிவிப்பு

cm&usஇலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின் ரஸ்ஸல் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குழுவினர் யாழிற்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார்.
இதன்போது அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது, Read more

கேபியை கைது செய்யாதது குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் விளக்கம்

KPவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் தொடர்பான அறிக்கையொன்றை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டபோது சட்ட மா அதிபர் இதனை தெரிவித்த போதிலும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தான விபரங்களை நீதிமன்றத்தில் அவர் குறிப்பிடவில்லை. Read more

நாணயத்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு போலி ஆவணங்களை அச்சிடும் நிறுவனம் முற்றுகை

gampolaகண்டி மற்றும் கலகெதர பிரதேசத்தில் நீண்டகாலமாக சட்டவிரோத ஆவணங்கள் அச்சிடும் நிலையமொன்றை பொலிஸார் நேற்று (26) திங்கட்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமான அச்சிடப்பட்ட போலி இரண்டாயிரம் ரூபா தாள்கள் ஆறும், ஆயிரம் ரூபா தாள்கள் 19, மற்றும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். Read more

இராணுவத்தினரின் கௌரவம் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி

maithriஇராணுவத்தினரின் கௌரவம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் கௌரவத்ததையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினரை பலவீனப்படுத்த அனுமதியளிக்கப்படமாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த வீரர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உரிய முறையில் பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கைப் படையினருக்கு கூடுதல் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகளை பிணையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு

ranilஇந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் தொடங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மனோ கணேசன் கூறினார்.
பிரமதருடனான இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான சுவாமிநாதன், திலக் மாரப்பன ஆகியோரும் காவல்துறை தலைவர் மற்றும் சட்டமா அதிபர் அலுவலக உயரதிகாரிகள் ஆகியோரும் பங்குபெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிணை வழங்குவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டதாக தேசியக் கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.
இந்தக் கூட்டத்தில் சட்டத்துக்கு உட்பட்டு, இயன்ற அளவில் தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது போலிஸ் விசாரணைகள் முடிவின்றி நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன என பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அத்துமீறி மீன்பிடித்த 23 இந்திய மீனவர்கள் கைது

Fishஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 23 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து ஒப்படைத்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்திய தமிழக பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்கள் 4 படகுகளில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளில் 13 மீனவர்களும், பருத்தித்துறை கடற்பரப்பில 2 படகுகளில் 10 மீனவர்களும்; அத்துமீறி மீன்பிடித்தபோது காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், குறித்த மீனவர்களை ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை மீனவர்கள் 26 பேரை இந்திய கடற்பாதுகாப்பு அததிகாரிகள் கைது செய்துள்ளனர். இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில்  பள்ளிவாசல் மீது தாக்குதல்

saudiசவுதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
நாட்டின் தெற்கேயுள்ள நர்ஜான் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கூறும் அரச ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா, அதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.
இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
அதற்கு ஐ எஸ் அமைப்பு தாங்களே பொறுப்பு என்றும் கூறியுள்ளது. அந்தத் தாக்குதல்கள் அனைத்தும், ஷியா சிறுபான்மை இனத்தவரை இலக்கு வைத்தே நடத்தப்பட்டன.
ஷியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான இஸ்மைலிகள் அதிகமாக இருக்கும் நர்ஜான் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதே இப்போது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சித்தப்பாவை தாக்கி பணத்தை கொள்ளையிட்ட பெறாமகள்

Robberதனது தாயின் சகோதரியின் (சித்தியின்) கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்துக்கொண்டு ஹட்டன் நகரிற்குச் சென்றுகொண்டிருந்த போதே குறித்த நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு, அவரிடம் இருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. Read more

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உட்பட தெற்காசிய நாடுகளில் நிலநடுக்கம்

qakeநிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 150 ஆக அதிகரிப்பு. பல சிறுவர்களும் பலி
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்ம் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உட்பட தெற்காசிய நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் நேரப்படி இன்று மதியம் 2.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், 30 முதல் 40 செக்கன்கள் வரை நீடித்திருந்தாகவும். ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தானில் 94 பேர் பலியானதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நில நடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
அதேவேளை ஆப்கானிஸ்தானில் பலி எண்ணிக்கை 17 என்றும் மேலும் 55 பேர் காயமடைந்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் பூகம்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியின் போது ஆப்கான் நகரமான தலுக்கானில் 12 பள்ளிச்சிறுமிகள் பலியாகியுள்ளனர். மேலும் 30 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்தியாவின் டெல்லி, காஷ்மீர், ஹரியானா மற்றும் தமிழ்நாட்டிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

courtsபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு தனியார் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
மரபணு அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 09ம் திகதி வரை ஒத்திவைப்பதாக யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் கராத்தே ஆசிரியர் கொலை; 08 பேர் கைது – 15 பேரை தேடுகிறது பொலிஸ்

arrestஅநுராதபுரம் இரவு விடுதி ஒன்றின் உரிமையாளரான பிரபல கராத்தே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சந்தேகத்தின் பேரில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் மேலும் 15 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று காலை இவர்கள் 08 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நீண்ட காலமாக காணப்பட்டு வந்த பகையே கொலைக்கான காரணம் என தெரிவித்த பொலிஸார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
20 பேரைக் கொண்ட ஒரு கும்பல் நேற்று முன்தினம் இரவு அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றின் உரிமையாளரான பிரபல கராத்தே ஆசிரியரை கொலை செய்திருந்தது. அத்துடன் அந்த இரவு விடுதியில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவரும் சம்பவத்தில் காயமடைந்திருந்தனர்.

தேடப்பட்ட குற்றாவாளி’ சோட்டா ராஜன் பாலியில் கைது

rajanஇந்தியக் குற்றக்குழுவொன்றின் தலைவரான சோட்டா ராஜனை இந்தோனேஷியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐஅயபந உழிலசiபாவ ளுஉநைnஉந Phழவழ டுiடிசயசல ஐஅயபந உயிவழைn கைது செய்யப்பட்டுள்ள சோட்டா ராஜன் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

ராஜேந்திர சதாஷிவ் நிகல்ஜெ என அறியப்படும் சோட்டா ராஜன் அல்லது குட்டி ராஜன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தார்.
பல கொலைகளுக்கு அவர் காரணம் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவரது தலைமையிலான குற்றக்குழு மும்பை நகரில் கள்ளக்கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று சிட்னி நகரிலிருந்து பாலி விமான நிலையத்துக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வேறொரு பெயரில் வாழ்ந்து வந்த அவரது பயணம் குறித்து, அந்நாட்டு காவல்துறையினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே பாலி விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா

கடந்த புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட லயனல் பெர்ணான்டோ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார

தனி விமானத்தில் பாரியளவில் போதைமருந்து கடத்திய சவூதி இளவரசர் கைது

சவூதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உட்பட மேலும் நான்கு பேர் லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக போதை மருந்து கடத்த முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியான விமானம் ஒன்றில் இரண்டு டொன் போதை மருந்தை இவர்கள் கடத்த முற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குடியேறிகளின் பிரச்சினையை சமாளிக்க புதிய திட்டம்

ஐரோப்பா நோக்கி வரும் குடியேறிகள் பல நெருக்கடிகளை சந்திக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வந்தடைய முயற்சிக்கும் மேலும் ஒரு லட்சம் குடியேறிகளுக்கான தற்காலிக குடியிருப்புகளை அமைப்பதற்கு, மத்திய ஐரோப்பிய மற்றும், பால்கன் நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
பிரசல்ஸில் இடம்பெற்ற அவசர மாநாட்டில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஸ்லோவேனியா, மற்றும் கிரேக்கம் ஆகியவை தமது எல்லைகளை பாதுகாத்துகாத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு உதவ நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இதேவேளை ஐரோப்பிய மற்றும் பால்கன் நாடுகள் தமக்குள்ளான ஓத்துழைப்பை மேம்படுத்துவதுவதற்கும் உறுதிபூண்டுள்ளன.

 

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – இன்று கொழும்பில்

TNA meeting 04தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல் இன்று கொழும்பில் புளொட் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜெனீவா தீர்மானம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு வடிவத்தை எடுப்பதற்கு இடையூறாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது. இது தொடர்பாக ஆக்கபூர்வமான முடிவொன்றை எடுப்பதையிட்டு கலந்துரையாடுவதெனவும், தமிழரசுக் கட்சியிடம் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாப்பு குறித்த தமிழரசுக் கட்சியின் யோசனைகள் தொடர்பாகவும் எதிர்வரும் 29ம் திகதி கட்சித் தலைவர்கள் கூடி பேசுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more