க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு-
2015ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகளை முன்னேற்றும் வகையிலான மாபெரும் இலவச கல்விக் கருத்தரங்கு நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் நேற்றுக்காலை 8மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. சமூக ஆர்வலரும், சமாதான நீதவானுமான திரு. கெங்காதரன் அவர்களது ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. இந்நிகழ்விற்கான அனுசரணையினை தலவாக்கலை ஐங்கரன் ஸ்ரோர்ஸ் மற்றும் நியூ ஸ்பீட் சைற் ஆகியன வழங்குகின்றன. யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற கணிதபாட ஆசிரியர் திரு. மணிவண்ணன் அவர்கள் இந்த இலவச கருத்தரங்கினை நடாத்தி வருகின்றார். இந்நிகழ்வில் 500ற்கும் மேற்பட்ட 2015ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டுள்ளனர். நேற்றையதினம் கணித பாடத்திற்கான கருத்தரங்கு நடைபெற்றதுடன், இன்று விஞ்ஞானபாடம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. நாளையதினம் தமிழ் பாட கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின்போது; 50கேள்விகள் கொடுக்கப்படும். இக் கேள்விகளுக்கான சரியான பதில் வழங்கும் மாணவ, மாணவியர் 50பேருக்கு 500ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு. கெங்காதரன், புhடசாலை அதிபர்கள் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆலய பரிபாலனசபையினர், ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.