மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு-

human rightsபல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நேற்று மேற்கொண்ட தாக்குதல் குறித்து உலமா கட்சி ஏற்பாட்டில் ஜாதிக பலய அமைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. இலங்கையின் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து அண்மையில் ஜாதிக பலய எனும் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர் ஆரியவங்ச திசாநாயக்க மற்றும் உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோர் இந்த அமைப்பில் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தங்கள் கல்விக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நேற்று மேற்கொண்ட மிக மோசமான தாக்குதலை ஜாதிக பலய வன்மையாகக் கண்டித்துள்ளது. அத்துடன் ஜாதிக பலய அமைப்பின் ஏனைய உறுப்பினர்களான சரத் மனமேந்திர, ஜயந்த குலதுங்க ஆகியோருடன் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் உள்ளிட்டோர் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளனர். பொலிஸாரின் அராஜகம் கட்டுப்படுத்தப்பட்டால் நல்லாட்சி என்பதற்கான அர்த்தம் கெட்டுப்போகும் என்றும் ஜாதிக பலய முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சி.என்.என் இயக்குனருக்கு சமூக சேவைக்கான கனடாவின் உயரிய விருது-(படங்கள் இணைப்பு)

Award-Tamilcnn-Canada-3-6-600x400தமிழ் சி.என்.என் இயக்குனரும், உலக பசியொழிப்பு மன்றத்தின் (Hunger Free World Foundation)) நிறுவனருமான அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களும், தமிழ் சி.என்.என் இன் தலைவர் (கனடா), உலக பசியொழிப்பு மன்றத்தின் (Hunger Free World Foundation) தலைவர் (கனடா) வி.எஸ் துரைராஜா அவர்களும் மாண்புமிகு எலிசபெத் மகாராணியின் கனடா நாட்டின் ஒன்ராறியோவுக்கான அரசுப் பிரதிநிதியும், ஒன்ராறியோ மாகாணத்தின் மாண்புமிகு ஆளுநர் Lieutenant Governor of Ontario) Elizabeth Dowdeswell அவர்களிடமிருந்து சமூக சேவைகளுக்கான இரண்டு விருதுகளினைப் பெற்றுக் கொண்டுள்ளனர். The national ethnic press and media council of canadaவின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு கடந்த 30.10.2015 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஒன்ராறியோ நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் சி.என்.என் இனைப் பிரதிநிதித்துவப் படுத்தி இருவர் உட்பட கனடாவில் பொதுச் சேவை உட்பட பல்வேறு சேவைகளிலும் திறமையாகச் செயற்பட்ட 11 பேருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சமூக சேவைக்கான விருதினைப் பெற்ற தமிழ் சி.என்.என் இயக்குனரும், உலக பசியொழிப்பு மன்றத்தின் (Hunger Free World Foundation) நிறுவனருமான அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், உண்மையில் எமது மக்களுக்கு ஏராளமான தேவைகள் இருகின்றன அவர்கள்தம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்கள் ஆகின்றனர். இது நீண்டகாலமாக என் மனதை உறுத்திய வெளிப்பாடே நன் சமூக சேவைகளை செய்யத்தொடங்கினேன் மற்றவர்களையும் செய்யத் தூண்டினேன்.ஆயினும் மக்களின் தேவைகளின் முன்னால் எனது சேவை மிகவும் குறுகியதாகவே காணப்படுகிறது. என்னை ஒரு சமூக சேவகன் என இபொழுது தான் உலகம் இனங்கண்டிருக்கிறது. ஆனால் எனது மண்ணில் எனது உறவுகள் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் என வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு வகையான விருதுகளையும் வழங்கி என்னை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. சமூக சேவை என்பது வெறும் புகழுக்கும் விருதுக்குமாக செய்யப்படுவது அல்ல அது ஆத்மார்த்த ரீதியில் மனித மனங்களை அறிந்து செய்யப்படுவது.அது சரியாகச் செய்யப்படும் போது அம மனங்கள் வெல்லப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோளோடு தோள் நின்று எம்மோடு சேவை புரிந்த அனைத்து இலத்திரனியல், அச்சு மற்றும் முக்கியமாக இணைய ஊடகங்களுக்கும், அதன் பொறுப்பாளர்களுக்கும் இந்த விருதினை நான் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். எங்கள் முன் செய்ய வேண்டிய ஏராளமான பணிகள் உள்ளன. அவற்றைக் காலம் தாழ்த்தாது மேற்கொள்ள அனைவரும் எம்மோடு இணைந்து பயணிக்க முன்வர வேண்டும். என்றார்.

தமிழ் சி.என்.என் இயக்குனரும், உலக பசியொழிப்பு மன்றத்தின் (Hunger Free World Foundation) நிறுவனருமான அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களின் சமூக சேவைகளைப் பாராட்டி இலங்கையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி ஆகிய பிரதேசங்களில் பட்டங்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Award-Tamilcnn-Canada-3-6-600x400Award-Tamilcnn-Canada-1-1-600x400 Award-Tamilcnn-Canada-1-3-600x400 Award-Tamilcnn-Canada-3-5-600x400 10291108_10153724537633064_9211942877902267030_n-600x400 Award-Tamilcnn-Canada-1-2-600x400