மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்-

parliamentகணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு சில பாதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக மாணவர்கள் சிலர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் மாணவர்கள்மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளபட்டமைக்கு நாட்டின் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை அமைத்துள்ளதோடு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் திலக் மாரப்பன இது குறித்து இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்ற ஏற்பாடாகியுள்ளது.

மின் கம்பிகள் விழுந்து மூன்று இராணுவத்தினர் உயிரிழப்பு-

deadகாலி – கிந்தோட்டை பகுதியில் அதிகவலு கொண்ட மின் கம்பிகள் முறிந்து வீழ்ந்ததில் இராணுவத்தினர் மூவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த வேனின் மீதே குறித்த மின் கம்பிகள் விழுந்துள்ளன. இந்த வேன் அம்பலாங்கொட பிரதேசத்திலுள்ள சாரதி பயிற்சி பாடசாலைக்கு சொந்தமானது எனவும் விபத்து ஏற்பட்டபோது வேனில் சாரதியுடன் பயிற்சி பெருபவர்கள் எட்டுப் பேர் இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்றுபகல் 1.10மணியளவில் கிந்தோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில், மின் கம்பிகள் விழுந்ததன் பின்னர் வாகனம் தீப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் காயமடைந்தவர்கள் காலி – கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவரே உயிரிழந்துள்ளனர். அத்துடன் வேன் சாரதி மற்றும் ஏனையவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காலி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கைதானவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு-

maldivianமாலைதீவு ஜனாதிபதியை கொலைசெய்ய முற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு தெகிவளையை அண்மித்த நெதிமலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் மாலைதீவு ஜனாதிபதியின் அதிவேகப் படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு ஒருவர், நேற்று முன்தினம் கொழும்பில் கைதுசெய்யப்பட்டார். நேற்றுக்காலை மாலைதீவுக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் அந்த நாட்டுப் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து சந்தேகநபரை 15நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாலைதீவு செய்திகள் கூறுகின்றன. இவ்விடயம் தொடர்பில் முன்னதாக மாலைதீவு துணை ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கைதானவர், மாலைதீவு துணை ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளர் என தன்னைக் காட்டிக் கொண்டவரும் சமூக வலைத்தளங்களில் ஷ_ம்பா ஹ_ங் என அறியப்பட்டவருமான அஹமட் அஸ்ரவ் என்று கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் சுட்டுக்கொலை-

gun shootingகாலி மாவட்டம் எல்பிடிய ரன்தொடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் ஊருகஹ, ஹபருகல வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேகநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறியுள்ளார். இச் சம்பவத்தில் அதே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் பெயர்ப் பட்டியலுக்கான விண்ணப்ப காலம்-

election.....2015ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தம்மைப் பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பிக்கும் காலம் இந்த மாதம் 12ம் திகதியுடன் நிறைவடைகிறது. தேர்தல்கள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்காளர் பட்டியில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலாளர் காரியாலயம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அனைத்து கிராம சேவக அதிகாரிகள் காரியலயங்கள் என்பவற்றில் பரிசோதித்துக் கொள்ள முடியும். அத்துடன் றறற.ளநடநஉவழைn.பழஎ.டம என்ற இணையத்தளத்திலும் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

vijayadasaயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றைய தினம் யாழ். நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கொழும்பிலிருந்து பலாலி இராணுவ படைத் தலைமையகத்திற்கு சென்ற அவர் அங்கிருந்து யாழ் சென்று நல்லூர் கந்தனை வழிபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து யாழ். நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.