அமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பு) பிறப்பு 09.04.1956 – இறப்பு 02.11.2015
கடல் கடந்து வாழ்ந்த கழகத்துக் கண்மணி,
காலமாகியது கண்டு கண்ணீர் மழைத்துளி..
புங்கைநகர் பெற்றெடுத்த புரட்சி இவன்,
ஆரம்ப காலங்களில் ஈழப்புரட்சிக்கு அணிதிரண்ட புத்திரன்..
மக்கள் விடுதலைக் கழகத்தின் மகத்தான தோழன் இவன்,
எண்ணிலடங்கா தோழர்களில் அர்ப்பணிப்புகளின் மத்தியிலே,
கார்ல் மாக்ஸ் சிந்தனையில் களிப்பினில் ஊறியவன்..
விடுதலைப் பயணத்தில் இடைவிலகல் தோன்றியதை,
வெறுப்புடன் பார்த்த – இவன்
இருப்பினும் விலகாது ஓடாதவன்..ஜெர்மனியில் வாழ்ந்தாலும்,
ஜென்மங்கள் மறைந்தாலும்,
பாசறைக் காலத்தை மனதிலே மறக்காதவன்..
ஈழத்தில் இருந்து இவன் பிரிந்து வாழ்ந்தாலும்,
ஈழ மண் விடிவிற்காய் இரவுபகலாய் உழைத்தவன்..
சென்றுவா சிவகுமாரா, உன் சிந்தனை பலிக்குமடா,
வெல்வது உறுதியென்று வீறு படை இருக்குதடா..
விண்ணிலே கொண்ட உன் தாய் மண் பாசத்தை,
எண்ணியே வாழ்கின்ற உன் உறவுகள் நாங்களடா..
கழகத்துத் தோழருக்கு வீர வணக்கத்தைத் செலுத்துகிறோம்,
கலங்கி நிற்கும் குடும்பத்திற்கு காவலாய் நாம் இருப்போம்..
விடைபெற்றுச் செல்கின்ற வீரனுக்கு வணக்கங்கள்,
விழிமூடி வணங்கி அஞ்சலித்து நிற்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ் கிளை
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எப்)சுவிஸ் கிளை