விழிநீர் அஞ்சலி – பிரான்ஸ் கிளை

suppuதோழர், சுப்பு அவர்களது இழப்பைக் கேட்டு ஆழ்ந்த துயரத்தில் கழகத் தோழர்கள் மூழ்கியிருக்கின்றோம். அவருடைய இழப்பு சாதாணரமானதில்லை. கழக்திற்காக தனது இறுதி மூச்சுவரை உழைத்த ஒரு தோழன். ஊரில் எவ்வளவோ பிரச்சினையின் மத்தியிலும் புலம்பெயர்ந்து வந்தாலும் புலம்பெயர் தேசத்திலும் தனது பணியை தமிழ் மக்களுக்காகவும் தன் நாட்டிற்காகவும் தனது கொள்கையில் இருந்து மாறாது செயற்பட்ட ஒரு செயல்வீரன். கடந்த வருடம் பிரான்ஸ் தேசத்திற்கு வந்து தோழர்களுடன் வீரமக்கள் தினத்தில் கலந்துகொண்டு வீரமக்களுக்கு அஞ்சலி செலுத்தி எங்கள் தோழர்களுடன் உறவாடிய ஒருவர் இன்று மரணமெய்தியதை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றோம். அன்னாருடைய ஆத்மா சாந்திபெற பிரான்ஸ் கிளைத் தோழர்கள் ஆகிய நாங்கள் எமது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம். 

பிரான்ஸ்கிளை
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

 விடியலின் பாதையில்

நின்மதி தந்த நிழல்களும் உனது புகழிடமும்
ஒன்றாய் ஓங்கி ஒலிக்கட்டும்.
புதிய தேசம் உருவாக்க
கை கொடுக்க வந்தவரே!
நாளை உன் நிழலில் நானும் மடியலாம்.
எம் இனத்துக்காய் தூர இருந்து குரல் எழுப்பினீர்
துணை நிற்கும் உறவுக்காய் கரம் அசைத்தீர்
தேசத்தின் விடிவிற்காய் விழுதானாய்
தோழா எம் நினைவில் நீ வந்து நிழல் ஆட
எம் மனம் துடிக்கிறதே
உன் நினைவால் வெந்து
உருகுகின்றோம் நித்தமும்
எப்படி விடியும் எம் இரவு……

plote-270x300

பிரான்ஸ் கிளை
தொடர்புகட்கு
திரு. ஜோன் திருச்செல்வம் (ஜோன்சன்)
திரு. தயாளரூபன்
தொலைபேசி – 0652388554 0753749321 0753265173