சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தீபாவளி விருந்தும் கலைநிகழ்வுகளும்

parathi02தீபாவளி தினத்தன்று வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களான பாரதி இல்லம்(முள்ளியவளை) இனிய வாழ்வு இல்லம்(புதுக்குடியிருப்பு) ஆகியவற்றுக்கு சிறப்பு மதிய உணவுகளும் மாலை நேர சிறப்பு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
புதுக்குடியிருப்பில் உள்ள இனியவாழ்வு இல்லத்தில் 53 அங்கவீனமுற்ற ஆண் பெண் பிள்ளைகள் உள்ளனர். முள்ளியவளையில் உள்ள பாரதி இல்லத்தில் 108 பெண் பிள்ளைகள் உள்ளனர் இவர்களுக்கு தீபாவளி நன்னாளில் சுவிஸ் நாட்டை சேர்ந்த கஜேந்திரரன்(கஜன்) பாரதி இல்லம் அன்பு இல்லம் ஆகியவற்றுக்கு சிறப்பு மதிய உணவை வழங்கி வைத்ததுடன் லண்டன் நாட்டை சேர்ந்த லோகஞானம்(லோகன்) இனியவாழ்வு இல்லத்திற்க்கு மற்றும் திருமதி சந்திரரதி கணேஸ்(அமேரிக்கா) அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாரதி இல்லத்திற்க்கும் மாலை நேர சிறப்பு சிற்றுண்டிகளை வழங்கியுள்ளார்கள். அத்துடன் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் உள்ள 125 பெண் பிள்ளைகளும் தீபாவழி தினத்தில் பாரதி இல்ல சிறுவர்களுடன் கலந்து மதிய போசன விருந்திலும் மாலை நேர சிற்றுண்டி விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டதுடன் பாரதி இல்ல சிறார்களுடன் இனைந்து பல கலை நிகழ்ச்சிகளையும் இவ் இல்ல சிறார்கள் இன்றைய தினம் வழங்கியிருந்தார்கள்.
வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று யுத்த அனர்தங்களினால் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பாரதி சிறுவர் இல்லம் இனிய வாழ்வு இல்லம் ஆகியவற்றில் உள்ள சிறார்களுக்கு இன் நன் நாளில் சிறப்புணவு வழங்கிய கஜேந்திரன்(சுவிஸ்) லோகஞானம்(லண்டன்) டாகடர்.கணேஸ்(அமேரிக்கா) ஆகியோருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் மனங்களை ஆற்றுபடுத்துகின்ற கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை புரிகின்ற எம் தாயக உறவுகள் புலம்பெயர் வாழ் உறுவுகள் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை இத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

parathi01parathi02parathi03parathi05jpgparathi06jpgparathi04parathi07jpgparathi09jpgparathi08jpgparathi10jpg