பரிஸ் நகர தாக்குதல் பாதிப்பு தொடர்பில் இலங்கையர் தகவல்களைப் பெற…
பிரான்ஸ் தலைநகர் பரிஸ் நகரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களால் நூற்றக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் கீழுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு இலக்கங்கள் 94112445264 அல்லது 0774919796, நஸீர் மஜீட் 33620505232 அல்லது குணசேகர 33677048117. இதேவேளை பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களில், ஆகக் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணிக்கையை, பிரான்ஸின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் 6 பகுதிகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூட்டுச் சம்பவம், குண்டுவெடிப்பு, பணயக் கைதிகளாகப் பிடித்துவைப்பு என, இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தாக்குதலாளிகள் நால்வரை பொலிஸார் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள ஜனாதிபதி பிராங்கொஸ் ஹொலன்டே, பரிஸ{க்கு இராணுவத்தினரையும் அனுப்பி வைத்துள்ளார்.