paris02paris01பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் பல்வேறு இடங்களில் (6இடங்கள்) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 140-க்கும் மேலாக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸ் நகரில் கிழக்குப்பகுதியில் பட்டாக்கிளன் என்ற கான்சர்ட் ஹாலுக்குள், (இசை அரங்கிலேயே மிக அதிக அளவிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ) துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இந்த திடீர் தாக்குதலால் பலர் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பிணையக்கைதிகளாக இருந்த 100 பேர் உட்பட 115 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.parisஇந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரீஸ் நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மற்றொரு தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மேலும், பிரான்ஸ்-ஜெர்மனி இடையேயான கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த வடக்கு பாரீஸ் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்ததையடுத்து அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்திய பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே பிரான்சில் தற்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘அப்பாவிப் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான முயற்சி’ என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இன்றிரவு பாரிசில் நடந்த சம்பவங்கள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும், பிரெஞ்சு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திப்போமென்றும் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
இந்தக் கொடூர தாக்குதல் பாரீஸ் நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.