பன்னாலை கணேசா சனசமூக நிலைய தீபாவளி விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)

ganeshaயாழ். பன்னாலை கணேசா சனசமூக நிலையத்தின் தீபாவளி விளையாட்டு விழா நேற்றுமாலை கணேசா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கிரிதரன் அவர்களுடைய தலைமையில் சனசமூக நிலையத் திடலில் நடைபெற்றது. கொட்டும் பழையிலும் தகரக் கொட்டகைகள் போடப்பட்டு இந்த விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா. கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டார்கள். கன மழைக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றியும் பங்குபற்றியோர்க்கு ஊக்கும் கொடுத்தும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

வைத்திய நிபுணர் சீ.நவரட்ணம் அவர்களது முயற்சி ஓர் சிறந்த முன்னுதாரணம் ஆகும் – வடக்கு விவசாய அமைச்சர்-(படங்கள் இணைப்பு)

P1110185வலி வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட விழிசிட்டி (வித்தகபுரம்) கிராமத்திற்கு குறித்த ககிராமத்தினைச் சேந்தவரும் தற்போது பிரித்தானியாவில் வாழும் புகழ்பூத்த வைத்திய நிபுணரும் சிறந்த சமூகசேவகருமாகிய சீ.நவரட்ணம் அவர்களது முழுமையான அனுசரனை மற்றும் நிதிப்பங்களிப்புடன் கடந்த 06.11.2015 அன்று 200 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்தினருக்கு 5 பயன்தரும் பழமரக்கன்றுகள் வீதம் குறித்த கிராமத்தின் சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வானது திருமதி. கோகிலா.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ.பொ.ஐங்கரநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலி வடக்கு பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலர் அவர்களும் கௌரவ விருந்தினராக குறித்த கிராமசேவை உத்தியோகத்தரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் குறித்த வைதத்திய நிபுணர் அவர்களின் உறவினரும் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் ஏற்பாட்;;டாளர்களின் விசேட அழைப்பின் பெயரில் கலந்து சிறப்பித்ததோடு ஏற்பாட்டாளர்கள் சார்பில் வடக்கு விவசாய அமைச்சருக்கு நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை தொடர்பில் பாராட்டுப் பத்திரத்தினையும் வழங்கி சிறப்பித்தார்.
இவ் நிகழ்வில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் உரையாற்றும்போது, புலம்பெயர் உறவுகள் எமது பிரதேசத்திற்கு பல்வேறு உதவிகள் மேற்கொண்டு வரும் நிலையில் வைத்திய நிபுணர் சீ.நவரட்ணம் அவர்களது முயற்சி என்பது முற்றிலும் வேறுபட்ட ஒர் சிந்தனையாக நிலைத்து நிற்கக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கின்றமை ஏனையவர்கட்கு மிகச் சிறந்த ஒர் முன்னுதாரணம் ஆகும். இதன்வாயிலாக அழிந்து விட்ட எமது பசுமைகள் மீண்டும் துளிர்விடக்கூடிய நிலை உருவாகும். இவ்வாறான செயற்பாடு அண்மைக்காலதில் இப் பகுதிகளில் மீளக்குடியமர்ந்த குடும்பங்கட்கு அவர்களது வாழ்கைத்தரங்களை மேம்படுத்திக்கொள்ள மற்றும் அவர்களது வாழ்வாதரத்தினை மேம்பத்திக்கொள்ள உதவும். இவ்மாதம் எமது வமாகாண சபையில் மரம் நாட்டும் மாதமாகவே மேற்கொண்டு வருகின்றோம். இதனிலும் எமது மாகாணத்திற்கு உட்பட்ட 5 மாவட்ங்களிலும் ஒரு மாவட்த்திற்கு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வீதம் நட்டப்பட்டு வருகின்றது. இவ் நவடிக்கைக்கு மேலாக இவ்வாறான சூழலை நேசிக்கின்ற சமூக சேவை நோக்கம் கொண்ட கொடையாளர்களது செயற்பாடுகள் எமக்கு மேலும் வலுச்சேர்க்கும் ஒர் நிகழ்வாகவே கருதவேண்டும். இவ் வகையில் வைத்திய நிபுணர் சீ.நவரட்ணம் அவர்களது செயற்பாட்டினை வாழ்த்துகின்றேன் என்றார்.

P1110185P1110165 P1110170 P1110177 P1110188 P1110190 P1110194 P1110221 P1110227