மல்லாவி வைத்தியசாலை வெளிநோயாளர்பிரிவு கட்டிட திறப்புவிழா-(படங்கள் இணைப்பு)

kumulamunai (6)முல்லைத்தீவு மல்லாவி பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத் திறப்புவிழா நிகழ்வு நேற்று (14.11.2015) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி எஸ். சிவமோகன், மாகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன், திரு. கமலேஸ்வரன் மற்றும் மாவட்ட உதவி ஆணையாளர் பூங்கோதை ஆகியோரும், வைத்திய அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேற்படி வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடமானது எயிற்ஸ், சயரோகம், மலேரியா ஆகிய நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின்கீழ் 25மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. mallawi (1)mallawi (2) mallawi (3)