இடம்பெயர்ந்த பேராறு மக்களை மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்) சந்தித்தார்-(படங்கள் இணைப்பு)

periyaru (1)கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பேராறு பிரதேச மக்களை வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு, உலருணவு உள்ளிட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒட்டிசுட்டான் பேராறு பிரதேசத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இவர்களுள் 98 குடும்பங்கள் வெள்ளத்தினால் வீடுகளிலே இருக்கமுடியாத நிலையில் இடம்பெயர்ந்து பேராறு பாடசாலையில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கான உணவு, உலருணவு உதவிகள் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

periyaru (1)periyaru (2) periyaru jj periyaru periyaruhhhgg