பாதிக்கப்பட்ட பண்டாரவன்னியன் பிரதேச மக்களை பார்வையிட்ட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்)-(படங்கள் இணைப்பு)

pandara vanniyanllஅடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தங்கியிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் கிராம மக்களை வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்குத் தேவையான உணவு, உலருணவு உள்ளிட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பண்டாரவன்னியன் பிரதேசத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இவர்களுள் 05 குடும்பங்கள் வெள்ளத்தினால் வீடுகளிலே இருக்கமுடியாத நிலையில் இடம்பெயர்ந்து பேராறு பிரதேச தேவாலயத்தில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கான சமைத்த உணவினை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன், நிவாரணங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. pandara vanniyanllpandara vanniyan pandara vanniyan.JPGf