புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன்(பவன்) வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு)-

MC member help (6)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் ஊடாக ஆடுகள், கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிக்கூடுகள் என்பன இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து இருபது குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இன்றுகாலை 10மணியளவில் வழங்கப்பட்டுள்ளன. இதில் பன்னிரண்டு குடும்பங்களுக்கு கோழிகளும் கோழிக்கூடுகளும், எட்டுக் குடும்பங்களுக்கு ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன், வன்னிப் மேம்பாட்டுப் பேரவை மற்றும் சாய் சமுர்த்தி என்பவற்றின் தலைவர் திரு. தவராஜா மாஸ்டர், கால்நடை அபிவிரு;தி திணைக்கள அதிகாரி வைத்தியக்கலாநிதி தயாபரன், வைத்திய அதிகாரிகள், கால்நடை அபிவிருத்திச் சங்கத் தலைவர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு. யசோதரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். MC member help (6)MC member help (1) MC member help (2) MC member help (3) MC member help (4) MC member help (5) MC member help (7) MC member help (8) MC member help (9) MC member help (10) MC member help (11) MC member help (12)