வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமை செயலகத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கனடா கிளையினரால் பாடசாலை மாணவர்களுக்கு ஜந்து துவிச்சகர வண்டிகள் அன்பளிப்பாக நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியாக துவிச்சக்கர வண்டிகளுக்கு விண்பித்திருந்த வட்டு மத்திய கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி(வட்டுக்கோட்டை) மற்றும் இராமணாதன் கல்லூரி(மருதனாமடம்) ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இவ் துவிசக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக பல வேலைத்திட்டங்களை செய்துவருகின்றனர் இதில் ஒரு அங்கமாகவே இம் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சங்க காரியாலத்தில் சங்க தலைவர் கு.பகீரதன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கனடாக்கிளை உறுப்பினரும் முன்னால் வட்டுக்கோட்டை இந்து வாலிhர் சங்க கொழும்புக்கிளை பொருளாளருமான சிவசேனாதிராஜா அராலி சரஸ்வதி மாகாவித்தியாலய அதிபர் திரு.ந சபாரட்ணசிங்கி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க முன்னாள் தலைவரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் சமூக சிந்தனையாளனும் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்ருமான சபாநாதன் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் சங்க உறுப்பினர்கள் என பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர். இது வரைக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைளை ஊக்குவிக்கும் முகமாக சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

12 5 6 7 9