விடத்தல்பளை கமலாசினி வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா-(படங்கள் இணைப்பு)

20151116_130314யாழ். விடத்தல்பளை கமலாசினி வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திரு. இ.நாகேந்திரன் அவர்களது தலைமையில் நேற்றுமாலை நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சட்டத்தரணி க.சிவசுப்பிரமணியம், மனோரஞ்சிதம் (உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பக்கல்;வி, வடமராட்சி) திருமதி கே.பத்மநாதன் (ஒய்வுநிலை அதிபர்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலை பிள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதன்போது கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் விசேட சித்திபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். தென்மராட்சியில் மூன்று மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றிருந்தனர். இவர்களுள் செல்வன் இருஜனன் என்ற மாணவருக்கு நிதியுதவியும் விசேட பரிசும் வழங்கப்பட்டது. மேலும் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் விசேட சித்திபெற்ற மேலும் மூன்று மாணவிகளுக்கு சிறப்புப் பரிசில்களும் வழங்கப்பட்டன. 20151116_13031420151116_131013 20151116_131023 20151116_132049 20151116_132112 20151116_134755 20151116_145349 20151116_145657