வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன் சந்தித்தார்-(படங்கள் இணைப்பு)

20151116_092805யாழ். கந்தரோடைப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலிருந்தும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பாடசாலைகள் மற்றும் முகாம்களுக்கு புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேற்றையதினம் நேரில் சென்று மக்களைப் பார்வையிட்டார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கந்தரோடை மக்கள் தங்கியுள்ள முகாம்கள் மற்றும் பாடசாலைகளுக்கு சென்று அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்கொண்டார். உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன், அதிகாரிகள் மக்களுக்கு சமைத்த உணவும், உலருணவுப் பொருட்களும் கிராம சேவையாளர் ஊடாக வழங்கியபோது, கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். 20151116_09280520151116_092757 20151116_092831 20151116_093031IMG_3233IMG_3237