கற்சிலைமடு அ.த.க பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு-

IMG_2933முல்லைத்தீவு, கற்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்றுமுற்பகல் 11மணியளவில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகணசபை உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மேரிகமலா குணசீலன், பேராறு பாடசாலையின் அதிபர் திருமதி சிவநேசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். புhடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மாசிலாமணி மகேந்திரன் (LONDON) அவர்களால் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது வடமகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்கள், தேர்ச்சிபெற்ற மாணவர்களை வாழ்த்தியதோடு, அவர்களை வழிநடத்திய அதிபர் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய திரு. கந்தையா சிவநேசன் அவர்கள்,

இந்தப் புலமைப்பரீட்சையில் தேர்ச்சிபெற்ற மாணவர்களைவிட தேர்ச்சி பெறாத மாணவர்களே பல்கலைக்கலகத்திற்கு அனுமதி பெறுகின்றனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே இந்தப் புலமைப்பரீட்சை தேவைதானா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது அத்தோடு எமது மாகாணம் கல்வியில் மாகாணரீதியில் கடைநிலையிலேயே உள்ளது. அதேபோன்று எமது மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம் கடைசித் தரத்திலேயே உள்ளது. ஆகவே எமது இந்நிலை மாற்றம் அடைய வேண்டும் அதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவை. மேலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பலர் எமது கல்வியின் மேம்பாட்டுக்காக ஊக்கமளித்து வருகின்றார்கள் அந்த வகையில் இந்தப் பாடசாலையை பார்வையிட வந்த திரு. மகேந்திரராஜா அவர்கள் இந்த சிறார்களுக்கு அன்பளிப்பு வழங்கினார். அவர் மேலும் பல உதவிகளையும் செய்வதாகக் குரிப்பிட்டார். எனவே ஏனைய நமது புலம்பெயர் உறவுகளும் எமது கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு உதவிகளைச் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

01 IMG_2975 IMG_3041 IMG_3050 IMG_3064