எட்டு புலம்பெயர் அமைப்புக்களின் தடை நீக்கம்-

governmentநாட்டில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலேயே சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் நிதி உதவி வழங்கியமை போன்ற காரணங்களின் அடிப்படையில் சில புலம்பெயர் அமைப்புக்களுக்கும் நபகர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த பட்டியலில் இருந்த 08 அமைப்புகள் மற்றும் 269 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகள் மற்றும் நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் செய்யத மீளாவை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த திருத்தம் அடங்கிய 1941ஃ44 என்ற இலக்கமுடைய அதி விசேட வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்பும் விதம் தொடர்பில் அவதானம் செலுத்தபட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழீழ விடுதலை புலிகள், ரீ.ஆர்.ஓ எனப்படும் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு தமிழர் தொடர்பாடல் குழு, எலக தமிழர் அமைப்பு எனப்படும் டப்ளியூ.ரி.எம் அமைப்பு, எல்லை தாண்டிய தமிழீழ அரசு எனப்படும் டி.ஜீ.டி.இ, திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் உலக தமிழர் நிவாரண நிதியம் என அழைக்கப்படும் எச்.கியூ குழுமம் ஆகியவற்றின் மீதான தடைகள் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.