யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதி திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)
யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கான கட்டிடம் இன்றுகாலை பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ. லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி. வசந்தி அரசரட்ணம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான், டீ சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பீ.எஸ்.எம் குணரத்ன, அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றும்போது, யாழ் பல்கலைக்கழக கல்வி வளர்ச்சிக்கும், வட மாகாண கல்வி வளர்ச்சிக்கும் மேலதிக நிதியினை ஒதுக்குவதாக தெரிவித்தார்.