ஊரெழுப் பகுதி வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன்-(படங்கள் இணைப்பு)

20151124_123802_resizedயாழ். ஊரெழுப் பகுதியில் வெள்ளம் காரணமாக பல வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்திருக்கின்றன. புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றும் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார். கிராம சேவையாளர் திரு. சிவானந்தன் அவர்கள் அந்தப் பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களைக் அழைத்துச் சென்று பாதிப்புக்களைக் காண்பித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோப்பாய் பகுதி பிரதேச செயலர் திரு. பிரதீபன் அவர்களுடன் தொடர்புகொண்டு அடுத்து வரவிருக்கின்ற வீட்டுத் திட்டத்தில் அந்தப் பகுதிக்கும் வீடுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்விடயத்தை தான் நிச்சயம் கவனத்தில் எடுப்பதாக பிரதேச செயலர் இதன்போது உறுதியளித்தார். ஊரெழுப் பிரதேச மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்கியிருந்தபோது அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. 20151124_123802_resized20151124_122135_resized 20151124_122154_resized 20151124_122945_resized 20151124_123012_resized 20151124_123033_resized 20151124_123445_resized 20151124_124228_resized 20151124_124554_resized