சிதம்பரபுரம் மக்களுக்கு வட மாகாண சபையால் உலருணவு உதவிகள்-(படங்கள் இணைப்பு)
வட மாகாண சபை விவசாய அமைச்சின் நிதி உதவியிலிருந்து சிதம்பரபுரம் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. அப்பகுதி பொது அமைப்புக்களின் அழைப்பின்பேரில் வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை 22.11.2015 அன்று பார்வையிட்டபோது அம்மக்களின் உடனடி தேவையாக உலருணவுப் பொருட்கள் தேவைப்பட்டது. வவுனியா மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், நடராஜ், இ.இந்திரராஜா ஆகியோருடன் கலந்துரையாடி விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் தொடர்புகொண்டு விபரத்தை தெரியப்படுத்தியதுடன் விவசாய அமைச்சின் நிதி உதவியுடன் சிதம்பரபுரம் கிராமம், சிதம்பரபுரம் முகாம், பழைய கற்குளம் போன்ற மக்களுக்கு 24.11.2015 செவ்வாய்க்கிழமை அன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது. வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்) இ.இந்திரராசா அவர்களின் செயலாளர் மற்றும் அக் கிராமங்களின் பொது அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.