மாணவனின் மரணத்தையிட்டு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்-கூட்டமைப்பு-

tna (4)18 வயது மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம், பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18வயது மாணவனின் இந்த செயல், சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயம். அதற்காக அவரது குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்விதமான ஒரு சூழலில் எல்லோரும் அமைதி காக்க வேண்டியது அத்தியாவசியமான தேவை. எவ்விதமான வன்முறையும் இல்லாமல் எங்களுடைய மனவருத்தத்தையும் அனுதாபத்தையும் ஒற்றுமையாக தெரிவிப்போம், பகிர்ந்து கொள்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சும்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் பெயரில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசியல் கைதிகள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளனர்-வியாழேந்திரன் எம்.பி-

viyalendranஅரசியல் கைதிகள் கூடுதல் தண்டனையை அனுபவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ். வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றில் விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்கள் பிழைகள் எதனையும் செய்யவில்லை என நான் கூறவில்லை. எனினும் அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனைகளை விடவும் அதிகளவு தண்டனையை அனுபவித்துள்ளனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மீனவர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் எவ்வித நலன்களும் வழங்கப்படவில்லை. அரச ஊழியர்களின் சம்பளங்கள் வருடாந்தம் 2000 ரூபாவிலேனும் அதிகரிக்கப்பட வேண்டும். மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. கல்விக்காக கூடியளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. அதில் வடக்கு கிழக்கின் கல்வித் துறைக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோருகின்றேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஓன்றிணைந்த எதிர்க்கட்சியின் பத்து எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு-

kiriyellaஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டதில் ஒன்றிணைந்த எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற வரவுசெலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியேல்ல இதனைத் தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவை அரசாங்கத்திற்கு நல்கவேண்டும். எதிர்வரும் 6மாதங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளார்.

25 இலட்சம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது-

arrest (30)25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொ{ஹவல பிரதேசத்தில் இவர் கைது செய்யப்ட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வைத்தியர் ஒருவரினால் இழைக்கப்பட்ட தவறிற்கு வழக்கு தொடராமல் இருக்க 25 இலட்சம் ஷரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உயரதிகாரி, குறித்த இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டா மாநாட்டில் உரை-

maithri24வது பொதுநலவாய நாடுகளின் அமர்வில் பங்குகொள்வதற்காக மோல்டா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 அளவில் அவர் உரையாற்றவுள்ளார். 24வது பொதுநலவாய நாடுகளின் மாநாடு மோல்டாவில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும், பொதுநலவாய மாநாட்டின் அமர்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மோல்டாவின் வெலேடா நகரில் இடம்பெறுகின்றது.