அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்ய விசேட மேல்நீதிமன்றம்-

courtsபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கான விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நீதிமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிள் வழக்குகள் தொடர்பில் இந்த விசேட நீதிமன்றத்தினூடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு 12 அமையப்பெற்றுள்ள நீதிமன்ற கட்டட தொகுதியில் இந்த விசேட மேல் நீதிமன்றம் இயங்கவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜெயமான்ன சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில் ஆர்ப்பாட்டம்-

arpattamமீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரச அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தவறில்லை-வாசுதேவ-

vasuஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தவறில்லை என இடதுசாரிக் கட்சிகளிடையே பொதுக் கருத்து காணப்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இடதுசாரிக் கட்சிகள் சில இணைந்து இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை றேமகொண்டிருந்தன. இதன்போது கருத்து வெளியிட்ட போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் அவர்களது நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிவினை குறித்த கருத்தை கைவிட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் எனினும் அவர்கள் தேசிய ஐக்கியத்திற்கு அத்தியவாரம் இடத் தயாராக உள்ளனரா என்ற கேள்வி எழுவதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதி தற்கொலைக்கு முயற்சி-

australiaசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டு நவுரு தீவு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபர் சுமார் 9 மணித்தியாலங்கள் மரம் ஒன்றின் மீது ஏறி கீழே குதிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். இவரது புகழிடக் கோரிக்கையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இவர் கீழே இறக்கப்பட்டுள்ளதோடு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை இவர் ஆரன் மயில்வாகனம் எனும் 30 வயதுiடையவராவார். .

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அபாயம் இல்லை – ஜனாதிபதி-

maithriநாட்டிற்கு அதிகளவு அன்பு செலுத்தும் தாம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பிரான்ஸில் நடைபெற்ற பிரான்ஸில் வாழும் இலங்கையர் ஒன்று கூடல் நிகழ்வின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று ஐக்கிய நாடுகளின் 2015 உலக காலநிலை மாநாடு பிரான்ஸ் நகரில் ஆரம்பமாக உள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3.00 மணியளவில் விஷேட விரிவுரை ஒன்றை ஆற்றவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புகையிரதம் இறக்குமதி செய்ய நடவடிக்கை-

trainஇந்தியக் கடன் திட்டத்தின் கீழ் புகையிரத திணைக்களத்திற்கு புகையிரத இயந்திரம், புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி மற்றும் பாதை அமைப்பதற்கு அமைச்சரவைக்கு இரண்டு அமைச்சரவை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரதப் பெட்டிகளில் குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து எஸ் 11 வகை புகையிரதப் பெட்டிகள் அடங்கிய 20 புகையிரதங்கள் இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்ட போதிலும் இதற்கு முன் சேவையில் இருந்த பெட்டிகளை விட அதில் குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பில் இரு சடலங்கள் மீட்பு-

dead.bodyகொழும்பின் வௌ;வேறு பகுதிகளிலிருந்து, இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பேர வாவி மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள கால்வாய் ஆகியவற்றிலிருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்களை அடையாளம் காண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பண்டத்தரிப்பு பகுதியில் தாச்சி விளையாட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

P1060375யாழ். பண்டத்தரிப்பு சாந்தைப் பகுதியில் யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் ஏற்பாட்டில் தாச்சி விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எஸ். சிறீதரன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வின் ஆரம்பத்தில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மங்கள விழக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். P1060375 P1060395 P1060398 P1060401 P1060406 P1060425 P1060436