சேர் பொன்னபம்பலம் இராமநாதன் அவர்களின் சிரார்த்ததினம்-(படங்கள் இணைப்பு)
சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் சிரார்த்ததின நிகழ்வு பழைய பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு அருகாமையில் இன்றுமாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் மற்றும் கொழும்பு விவேகானந்த சபையின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டிருந்தனர். அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் சேர் பொன் இராமநாதன் அவர்களைப் பற்றி உரைநிகழ்த்தினார்கள்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலங்கையிலே முதன்முதலாக பெண்களுக்கான இந்து பாடசாலையாக யாழ் இராமநாதன் பெண்கள் கல்லூரியையும், அதேநேரம் ஆண்களுக்காக யாழ். பரமேஸ்வராக் கல்லூரியையும் 1813ல் ஆரம்பித்தார். இவர் பெண்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என கூறினார் என்ற ஒரு தவறுதலான குறை காணப்பட்டு வருகின்றது. அதாவது. அவர் இதைக் கூறியதற்கான காரணம் அன்று பெண்களிலே கல்வி கற்றவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். கல்வி கற்றோர்க்குத்தான் அன்று வாக்குரிமை இருந்தது. இதன்படி வாக்களிப்பின்போது கல்வி கற்றோர் மத்தியில் சமநிலை அற்றுப்போய் விடும் அதாவது பெண்களுக்கு என்று வாக்களிக்கின்றபோது கல்வி கற்காதவர்களே பெரும்பாலும் இருந்து அவர்களுக்கு வாக்குரிமை இல்லாதபடியால் அங்கு சமநிலை அற்றுபோய் விடும் என்ற காரணத்தினால்தான் அவர் அவ்வாறு தெரிவித்தாரென சில அறிஞர்கள் கூறுகின்றனர். அத்துடன் இலங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கான வெசாக் பண்டிகைக்காக ஆங்கிலேயருக்கு அழுத்தம் கொடுத்து அந்த நாளை விடுதலை நாளாக மாற்றிக் கொடுத்ததே சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள்தான். மேலும் இலங்கையில் வெள்ளையர் காலத்திலே அதாவது 1800களின் கடைசிப் பகுதியிலே அப்போதிருந்த சட்டநிரூபண சபைக்கு முதல்முதலாக இரண்டு இலங்கையர்களை வெள்ளையர்களின் ஆட்சி நியமித்திருந்தது. அந்த இருவர் சேர் பொன். இராமநாதன் அவர்களும் அவருடைய சகோதரருமே என்று தெரிவித்தார்.