Header image alt text

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 7 துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு(படங்ள் இணைப்பு)-

IMG_9545தமிழர்களின் சிறப்பு நாள் வாரத்தையொட்டி மல்லாவி பாண்டியன் குளம் ஆரம்ப பாடசாலை பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தை சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேற்படி நிகழ்வானது மல்லாவி பாண்டியன்குளம் மகா வித்தியாலத்தில் கல்லூரி அதிபர் முன்னிலையில் நேற்று (25.11.2015)புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க முன்னால் தலைவரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ், சங்க முன்னாள் செயளாளரும் தேசிய சேமிப்பு வங்கியின் கடன் நிறைவேற்று அதிகாரியுமான செ.செந்தூரன், துணுக்காய் சமுர்த்தி உத்தியோகத்தர் டி.குணதாஸ், கொமர்சல் வங்கி உத்தியோகத்தர் ரமணன், செலான் வங்கி உத்தியோகத்தர் நிரோசன், சங்கானை பிரதேச செயளக சமுர்த்தி உத்தியோகத்தர் திலீபன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வில் பாண்டயன்குளம் ஆரம்ப பாடசாலையிலிருந்து கோகுலன் தமிழினி கேதீஸ்வரன் தமிழினி இந்திரராசா இந்துசா ஆகியோர்க்கும், பாண்டியன்குளம் மாகாவித்தில் இருந்து தேவராசா லிசிதா பத்மனாதன் சசிகலா நாகேந்திரன் தனுசியா மற்றும் கிளிநொச்சி மாகாவித்தியாலய மாணவி செல்வி ராகவி ஆகியோருக்கும் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டன.
Read more

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ் மாணவன் உயிர்த்தியாகம்-

suicide (1)நல்லாட்சி அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உயர்தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு இன்று ஓடும் புகையிரதம் முன் பாயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோப்பாய் வடக்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்றுகாலை யாழ்.கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத வண்டிக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவனின் சடலத்துடன், தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தினையும் கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விடுதலையை கொடு ஒளியையூட்டு,
அதிமேதகு ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கங்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஒரு அரசியல் கைதியேனும் சிறையில் இருக்க முடியாது. Read more

கைதிகள் விடுதலை பெறுவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை-அமைச்சர் விஜயதாச-

wijayadasa rajapakseபயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையல்லவென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 204பேர் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 56பேர் குற்றவாளிகள், 124பேருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன என நிதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

வவுனியா அரச அதிபர் நியமனத்தில் அதிருப்தி-

tnaவவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த புஸ்பகுமார நியமிக் கப்பட்டு, அவர் செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கடமையேற்றுக் கொண்டுள்ளார். அதனைத் தாம் எதிர்ப்பதாகவும் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது. இதனைத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. தமிழ்க் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் இதில் கலந்து கொண்டன. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்கள் கூறியதாவது:- முரண்பாட்டுக்கும் சர்ச்சைக்குமுரிய வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பில் தாம் பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமது ஆட்சேபனையையும் நியாயங்களையும் எடுத்துக் கூறிய பின்னரும் கூட மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், வாக்களித்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே எம்மால் பார்க்க முடிகின்றது.
Read more

பூஸா சிறைக்கைதிகளை விளக்கமறியலுக்கு மாற்றுமாறு கோரிக்கை-

jailபயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விசேட ஏற்பாடுகளின் கீழ் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேர் தம்மை விளக்கமறியலுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தகவலை குறித்த நால்வரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே மெகசின் மற்றும் அனுராதபுர சிறையில் இருந்து கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பூஸாவுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் வசதிகளற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை மீண்டும் விளக்கமறியல் சிறைகளுக்கு மாற்றவேண்டும் என்று இந்த நால்வரும் கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பட்டதாரிகள் சங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடை-

bachelorஒன்றிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் சங்கம் நடத்துவதற்கு தயாராகவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைக்கு கடுவெல நீதிமன்ற நீதிவான் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். பாடசாலைகள் உட்பட, அரச துறையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள் இருக்கின்ற போதும், அவற்றுக்கு பட்டதாரிகளை உள்வாங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் நடத்தப்படவிருந்தனர். இன்றுமதியம் 12 மணியளவில் குறித்த போராட்டம் நடத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலங்கம காவல்துறையினர் இன்று நீதிமன்றில் விளக்கமளித்திருந்ததுடன், பின்னர் பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்ற திசைக்கு நுழைவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுவெல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

கோட்டாபய பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சமூகமளித்தார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கே இவர்கள் அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். முன்னாள் கடற்படை தளபதிகளான ஜெயந்த பெரேரா மற்றும் ஜெயநாத் கொழம்பகே ஆகியயோரும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். மேலும் முன்னாள் பாதுகாப்பு மேலதிக செயலாளர் தமயந்தி ஜெயரட்னவும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் கைதிகளின் நிலை தொடர்பில் பிரித்தானியா அவதானம்-

britishஇலங்கையில் தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தமிழ் கைதிகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரினால் இந்த கருத்து தெரிவிக்கப்பட்தாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. தமிழ் கைதிகளினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் டிசம்பர் 15ம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் தாம் இலங்கை அரசுடன் கலந்துரையாடி வருவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஜெனிவாவில் கடந்த செப்டம்பர் மாதம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை தொடர்பில் தாம் திருப்தியடைவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைத்து சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைய இது தொடர்பான சட்டமூலத்தை உருவாக்குமாறும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கபட்டுள்ளதாக பிரித்தானி வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைய மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை செயற்படுவதற்கு பிரித்தானியா ஒத்துழைக்கும் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு, நிறுவனர் நினைவு, மெய்யொளி நூல் வெளியீட்டு நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

20151125_092717_resizedயாழ். இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவனர் நினைவுநாளும், மெய்யொளி நூல் வெளியீடும் இன்றுகாலை 9மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. அ.இரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ந.ஈஸ்வரநாதன் (கோட்டக்கல்வி அதிகாரி தெல்லிப்பளை) அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது வணபிதா யேசுதாஸ்(இளவாலை சென்ற் ஹென்ரீஸ் பாடசாலை அதிபர்), பாலச்சந்திரக் குருக்கள் ஆகியோரை ஆசியுரையினை வழங்கினார்கள். தொடர்ந்து திரு.சுதர்சன் (ஊர்காவற்றுறை பிரதேசசபை செயலாளர்), திரு.ரிஷாந்தன் (முகாமைத்துவ உதவியாளர்) பிரதேச செயலகம் ஊர்காவற்றுறை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதன்போது பாடசாலைப் பி;ள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றதோடு தொடர்ந்து பரிசளிப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டிருந்தனர். Read more

மாரீசன்கூடல் சுப்பிரமணியம் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-(படங்கள் இணைப்பு)

20151125_130755_resized_1யாழ். மாரீசன்கூடல் சுப்பிரமணியம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திரு. மணிவண்ணன் அவர்களது தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நிரஞ்சலா அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது பாடசாலைப் பிள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்து பரிசளிப்பும் இடம்பெற்றது.

இங்கு உரைநிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,  மாரீசன்கூடல் என்பது ஒரு மிகவும் பின்தங்கிய கிராமமாகும். வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளே கூடுதலாக இக்கிராமப் பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர். அவ்வாறான ஒரு பாடசாலையில் இருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் பிள்ளைகளில் சிலர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடையாமைக்கு முக்கிய காரணம் யாதெனில் அந்தப் பிள்ளைகளுக்கு பரீட்சைக்கான கேள்விகளை வாசித்து கிரகித்து அதனை விளங்கிக் கொள்ளும் அறிவு போதாமல் இருக்கின்றமையே என்பதை பல கல்வியதிகாரிகள் என்னிடம் கூறியிருக்கின்றார்கள் என்பதுடன், பல பாடசாலைகளுக்குச் செல்வதால் என்னாலும் அதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
Read more

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நிவாரணம்-(படங்கள் இணைப்பு)

photo 2 (3)முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்த முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன்(பவன்), துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் அவர்களுக்கான உலருணவு நிவாரணங்களை வழங்கியுள்ளனர். இதன்படி வட மாகாணசபை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களுடைய மாகாணசபை உணவு வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட உலருணவு நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
Read more

ஏழாலையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)

20151124_120131யாழ். ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் 2016ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பிள்ளைகளுக்காக இலவச பிரத்தியேக வகுப்புக்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இப்பிள்ளைகளுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவது குறித்து புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய லண்டனில் வசிக்கும் கழகத் தோழர் திரு. வேலாயுதம் மணிவண்ணன் அவர்களின் அனுசரணையில் மேற்படி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. திரு. சபேசன் (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்) அவர்களின் ஒழுங்கமைப்பில் பாடசாலையின் அதிபர் திருமதி பிரதா அவர்களது தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் ஆசிரியர் கேதீஸ்வரன், திரு மணிவண்ணனின் சகோதரர் ஹரிவண்ணன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், Read more

ஊரெழுப் பகுதி வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன்-(படங்கள் இணைப்பு)

20151124_123802_resizedயாழ். ஊரெழுப் பகுதியில் வெள்ளம் காரணமாக பல வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்திருக்கின்றன. புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றும் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார். கிராம சேவையாளர் திரு. சிவானந்தன் அவர்கள் அந்தப் பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களைக் அழைத்துச் சென்று பாதிப்புக்களைக் காண்பித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோப்பாய் பகுதி பிரதேச செயலர் திரு. பிரதீபன் அவர்களுடன் தொடர்புகொண்டு அடுத்து வரவிருக்கின்ற வீட்டுத் திட்டத்தில் அந்தப் பகுதிக்கும் வீடுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்விடயத்தை தான் நிச்சயம் கவனத்தில் எடுப்பதாக பிரதேச செயலர் இதன்போது உறுதியளித்தார். ஊரெழுப் பிரதேச மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்கியிருந்தபோது அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. Read more