தண்டனையற்ற புனர்வாழ்வே வேண்டும்-அரசியல் கைதிகள்-

jailகுறுகிய தண்டனைகள் இன்றி வழக்குகளை இரத்து செய்து நேரடியாக புனர்வாழ்வுக்கு அனுப்பிவைக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் சிலர் வவுனியா மேல் நீதவான் பிரேம் சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் நேற்றையதினம் மேல் நீதிமன்ற நீதவான் பிரேம்சங்கர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வ.அஜித், குலசிங்கம் கோகுலராஜ் மற்றும் அநுராதபுரம் சிறையிலுள்ள குழந்தைவேல் தயாபரன், கார்த்திகேசன் நாதன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஆகியோரே நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு விசாரணையின்போது புனர்வாழ்வு பெறுவதற்கு தயாரா? என தமிழ் அரசியல் கைதிகளிடம் நீதவான் வினவியுள்ளார். இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட அரசியல் கைதிகள், தங்களது வழக்குகளை இரத்துசெய்துவிட்டு தண்டனை அற்ற புனர்வாழ்வை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து ஆராயப்படும் என அறிவித்த நீதவான், அரச தரப்பு சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகாததை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி 12ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சங்கானைக் கோட்ட முன்பள்ளிகளின் கலைவிழாவும் கண்காட்சியும்-(படங்கள்)

P1100616யாழ். சுழிபுரம் விக்Nhறியாக் கல்லூரியில் சங்கானைக் கோட்ட முன்பள்ளிகளின் கலை விழா இம்பெற்றது. இவ் நிகழ்வில் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர், சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர், விக்டோறியாக் கல்லூரி அதிபர், வலி மேற்கு பிரதேச முன்பள்ளிகளின் இணைப்பாளர் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஒவ்வேர் முன்பள்ளிகளாலும் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.

P1100616 P1100619 P1100634 P1100645 P1100646 P1100649 P1100652 P1100665 P1100713