ஓமந்தையில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் நடாத்தும் 02 வது மாபெரும் இரத்ததான முகாம்.குருதிக்கொடையாளர்களுக்கு அழைப்பு!!

TNYOவவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை அடுத்து தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வவுனியா மாவட்ட கிளையினரின் ஒழுங்கமைப்பில், கழகத்தின் சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.திவாகரன் தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை (05.12.2015) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற இருக்கின்றது. வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய இளைஞர் கழகமானது இலங்கையின் பல பாகங்களில் தமது சமூக, கலை, கலாசார, கல்வி அபிவிருத்திகளில் ஈடுபட்டு இருக்கும் அதேவேளையில் தொடர்ந்து நாடு பூராகவும் 03 வது தடவையாக இரத்ததான முகாமை நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரை காக்கும் உன்னத பணிக்கு இளைஞர்கள், யுவதிகள், ஆர்வமுள்ள பொது மக்கள் அனைவரையும் தமிழ் தேசிய இளைஞர் கழகம் அழைத்து நிற்கிறது. இரத்ததானம் செய்ய விரும்பியவர்கள் ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள – 076 664 4059, 077 453 9678 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.