வட மாகாணசபையும், மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை-(படங்கள் இணைப்பு)

03வட மாகாணசபையும். முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்றையதினம் முல்லைத்தீவு மாகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது வடமாகாண விவசாய அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இருந்து 39லட்சத்து 40ஆயிரம் ரூபாய் செலவில் பெறப்பட்ட அருவிவெட்டும் இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தேவைகருதி இந்த இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அவர்கள் ஒருங்கிணைந்த பண்ணையாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினரிடம் இதனைக் கையளித்தார். இந்நிகழ்வில் வட மாகாணசபை விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் அவர்களும், மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன்(பவன்), துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன் ஆகியோரும், ஒருங்கிணைந்த பண்ணையாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினரும் கலந்து கொண்டிருந்ததுடன், பெருமளவிலான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 01 02 03