Header image alt text

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்திற்கு அனுமதி-

ranilதகவல் அறியும் உரிமை தொடர்பான வரைபுச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இதேவேளை, அரச ஊழியர்களுக்கு தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை 10 வருடங்களுக்கு ஒரு முறையே பெற முடியும் எனவும் கூறிய பிரதமர் இதனை இரண்டு முறை மட்டுமே பெரும் வகையில் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த அமைச்சரவைப் பத்திரத்தை ஊடகத்துறை அமைச்சர், கயந்த கருணாதிலக்க சமர்ப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தின் நீதியரசராக சித்ரசிறி-

sithrasiriஉயர்நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக கங்கானிதந்திரி சித்ரசிறி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்றுகாலை பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நலின் ஜயலத் பெரேரா இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆணைக்குழுவில் பிரசன்னம்-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். றக்னலங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். ஆவர் இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

சஜின்வாஸ் குணவர்த்தன வெளிநாடு செல்ல தடை-

sachin vassஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தன வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் குறித்த கோரிக்கையை இன்று நிராகரித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மே 11ம் திகதி கைதுசெய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின் சஜின் வாஸ் கடந்த செப்டம்பர் 23ம்திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் கடந்த ஒக்டோபர் 20ம் திகதி மருத்துவத் தேவைக்காக வெளிநாடு செல்ல அவருக்கு நீதிமன்றம் ஐந்து நாட்கள் அனுமதியளித்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை-ஆனந்தன் எம்.பி-

sivasakthi ananthanயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகள் வரவு-செலவுத்திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லையென ஈ.பி.ஆர்.எல்.எவ்இன் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் கலந்துகொள்ளாமைக்கான காரணம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு எதிர்பார்த்த நிவாரணங்கள் இந்த வரவு- செலவுத்திட்டத்தில் வழங்கப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்கள் வாழ்கின்ற மாவட்டங்களில் தமிழ் அரச அதிபர்களை நியமித்தல் போன்ற சிறிய அரசியல் கோரிக்கைகளைக்கூட இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. முன்னர் ஆட்சியாளர்களாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் பெரும்பான்மை இனக்கட்சிகள் இருந்தமையால்தான் எமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமல் இருந்தன எனக் கருதப்பட்டது. Read more

மைத்திரபால அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது-அமைச்சர் மங்கள-

mangalaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளிநாட்டுத் தலைவர்கள் தேடிவந்து சந்திக்கும் அளவுக்கு சர்வதேச ரீதியில் நாட்டுக்கு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஒன்பதாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஆவர் மேலும் உரையாற்றுகையில், வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றியிருந்த தினேஸ் குணவர்த்தன எம்.பி, இலங்கையைப் போன்று அமெரிக்காவும் சீனாவிடம் மண்டியிடுவதாகக் கூறியிருந்தார். இதன்மூலம் கடந்த அரசாங்கத்தில் இலங்கை சீனாவிடம் மண்டியிட்டிருந்தது என்பது புலனாகிறது. எனினும், நான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் யாருக்கும் வளைந்து கொடுக்காத வெளிநாட்டுக் கொள்கையுடன் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது. மோல்டா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த ஜனாதிபதியை. பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் தேடிவந்து சந்தித்திருந்தனர். Read more