அரச உயர் அதிகாரிகள் இருவர் கைது-

arrestபிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2013ம் இடம்பெற்ற இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பாக நிதி மோசடி தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மேலும் சில அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக எதிர்வரும் தினங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக பாரிய மோசடிகள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணக்குழு தெரரிவிக்கின்றது. தற்பொழுது இடம்பெற்று வரும் விசாரணைகளின் மூலம் ஊழலில் ஈடுபட்ட மேலும் சில அரச அதிகாரிகள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு தகவல் கிடைத்துள்ள குறித்த அரச அதிகாரிகள், அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களில் உயர் பதவிகளில் இருப்பதால், ஊழல் மோசடிகள் சம்பந்தமாக தற்பொழுது இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த அரச அதிகாரிகளை அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இதன்படி இவ்வாறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய மேலும் சில அரச அதிகாரிகள் தொடர்பான தகவல்களை முன்வைக்க எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.