வெள்ளத்தில் சிக்கிய இலங்கையர்களை அழைத்துவர விஷேட விமானம்-

special flightசென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை விஷேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் புத்தகயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற 120 இலங்கையர்கள் இவ்வாறு சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை அழைத்து வருவதற்கான விஷேட விமானம் நாளை இந்தியாவின் காயா நோக்கிப் புறப்படவுள்ளதாக இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஹல்தமுல்ல பிரதேசத்தில் மண்சரிவு-

landslideபதுளை, ஹல்தமுல்ல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. பெரகல – கொஸ்லந்த வீதியில் ரணசிங்க பிரதேசத்தில் குறித்த மண்சரிவு இடம்பெற்றுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார். அந்தப் பிரதேச பாதை வழியாக பயணிக்கும் சாரதிகள் அவதானமாக செயல்படுமாறு அவர் மேலும் கூறியுள்ளார்.

நாலக கொடஹேவா மோசடி தடுப்புப் பிரிவிற்கு அழைப்பு-

nalakaபிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான நாலக கொடஹேவாவை நாளையதினம் பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாலக கொடஹேவா பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறையில் மோட்டார் குண்டு மீட்பு-

bombயாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் வெடிக்காத நிலையிலுள்ள மோட்டார் குண்டொன்று நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றில் வவா என்று நாமமிடப்படும் மோட்டார் குண்டு காணப்படுவதாக வல்வெட்டித்துறைப் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலின்படி விசேட அதிரடிப்படையினர் தேடுதலை மேற்கொண்டனர். நடாத்தப்பட்ட தேடுதலில் மோட்டார் குண்டு மீட்கப்பட்டது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீரழிவுக்குட்பட்ட நாட்டை ஒரே நாளில் திருத்திவிட முடியாது-சந்திரிகா-

chandrikaகடந்த 9 வருடங்களாக சீரழிவுக்குட்பட்ட நாட்டை ஒரே நாளில் திருத்திவிட முடியாது எனவும் திருடர்களைப் பிடிப்பது மாத்திரம் அல்ல எதிர்காலத்தில் திருடாமல் இருப்பதற்கான செயற்திட்டமொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் துறைமுக கிளையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.