Header image alt text

ஏமனில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏடன் மாகாண கவர்னரும், அவரது மெய்க்காவலர்கள் 6 பேரும் உயிரிழந்தனர்.

Yemenஏமன் நாட்டின், ஏடன் மாகாணத்தின் கவர்னர் ஜாபர் முகமதுசாத், தனது அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, வெடிகுண்டுகள் நிரப்பிய காரை தற்கொலைப்படை தீவிரவாதி, கவர்னரின் பாதுகாப்பு வாகனம் மீது மோதியுள்ளனர். இதில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி கவர்னர் ஜாபர் முகமது சாத்தும், அவரது மெய்க்காவலர்கள் 6 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ராணுவ ஜெனரலாக பணியாற்றிய ஜாபர் முகமது சாத் கடந்த அக்டோபர் மாதம் தான் அவர் கவர்னர் ஆனார். உயிரிழந்த கவர்னர் ஜாபர் முகமது சாத், ஏமன் அதிபர் மன்சூர் ஹாதியின் நெருங்கிய கூட்டாளி ஆவார். Read more

அரசியல் கைதிகள் விடுதலை – பாதுகாப்பை அதிகரிக்க மஹிந்த கோரிக்கை

mahindaமுன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் அளவு போதாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு செயலாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதால் அவரது பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு இவர்களை விடுவிப்பதாயின் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள படையினரின் தொகையை அதிகரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மஹிந்த தவிர்த்து யுத்தத்துடன் தொடர்புடைய சிவில் மற்றும் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்த் தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றன.

llபொலநறுவ மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரம், அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்கா சமுத்திரம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெரிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் இடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது.
நீர்த் தேக்கங்களும் குளங்களும் திறந்து விடப்பட்டுள்ளதால் அதற்கு அருகாமையில் வாழும் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையத்தின் துனை இயக்குநர் பிரதீப் கொடிப்புலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நீர்த்தேக்கங்களும் குளங்களும் திற்ந்து விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சாலைகளும் வீதிகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லல ஆகிய இடங்களிலும், மன்னார்-புத்தளம் சாலையில் எழுவான்குளத்திலும் இப்படியான நிலை காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.
புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதுப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கை பதிவாகியுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறிப்பிடுகின்ன.
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை நீடிக்கும் என் தெரிவிக்கப்படுகின்து.

வங்கதேசத்தின் வடபகுதியில் இந்துக்குகள் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்துள்ளன.

hindu_festivalநாட்டின் வடக்கேயுள்ள தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் நடைபெறும் மதத் திருவிழா காலத்தில் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளன.
இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பில், ஐவர் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றாலும் யாரும் கைது செய்யப்படவில்லை.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் சுமார் 10 சதவீதம் உள்ளனர்.
அண்மைக் காலத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மை ஷியாப் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள், மதச்சார்பற்றவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது இஸ்லாமியவாதிகள் தொடர்ச்சியாக கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவின் ரக்கா நகர் மீது கடும் வான் தாக்குதல்கள்  பிரிட்டனின் வான் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை:சிரிய அதிபர் அஸத்

raqqaசிரியாவில் ஐ எஸ் அமைப்பு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளின் கோட்டை எனக் கருதப்படும் ரக்கா நகர் மீது கடுமையான வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களுக்கு ரஷ்ய விமானங்களே பொறுப்பு என ரக்காவிலிருக்கும் செயல்பாட்டாளர்களின் வலையமைப்பு கூறுகிறது.
இத்தாக்குதலில் கணிசமான அளவுக்கு பெண்களும், சிறார்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ரக்கா நகரில் ஐ எஸ் அமைப்பினர் பலமாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது Read more